ஓ இதுக்குத்தான் அப்படி ஒரு முடிவா? சிஎஸ்கே சைலண்டாக செய்த 3 மூவ்.. 9 டீம்களுக்கு தோனி தந்த ஷாக்
சென்னை: ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் கட்ட ஏலம் தீவிரமாக நடந்தது. இதில் சிஎஸ்கே முக்கியமான சில வீரர்களை எடுத்தது.
1. முதல் ஆளாக வந்த அர்ஷ்தீப் சிங்கை சிஎஸ்கே அணி கேட்டது கவனம் பெற்றுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் கேட்டது. இதில் டெல்லி அணி இணைய.. ஏலம் 7.5 கோடி ரூபாய் வரை சென்றது. 7.5 கோடி ரூபாய்க்கு சென்னை போட்டியில் இருந்து விலகியது. கடைசியில் 15.75 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அர்ஷ்தீப் சிங்கை எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து 18 கோடி ரூபாய்க்கு அவரின் ஏலத்தை ஹைதராபாத் உயர்த்தியது. அதை பஞ்சாப் அணி ஏற்றுக்கொண்ட நிலையில்.. அவர் பஞ்சாப் அணிக்கு ஏலம் விடப்பட்டார்.

2. முகமது ஷமியை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி தீவிரமாக முயன்றது. கொல்கத்தா அணியுடன் சிஎஸ்கே அணி தீவிரமாக மோதியது. 5 கோடி ரூபாய்க்கு மேல் சிஎஸ்கே அணி பெரிதாக ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் போட்டி கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையே சென்றது. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணியும் போட்டியில் ஐக்கியம் ஆனது. இறுதியாக 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் ஷமி எடுக்கப்பட்டார் .
3. இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி ப்ரூக்கிற்கு சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து சென்றது. இவரை எடுக்க பஞ்சாப் தீவிரமாக முயன்றது. கடைசியில் டெல்லி அணி 6.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணிக்கு அவர் கிடைக்காமல் போனார்.
4. நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுக்க பஞ்சாப் - சிஎஸ்கே இடையே மாறி மாறி போட்டி நடந்தது. இதையடுத்து 3 கோடி ரூபாய்க்கு பின் விட்டு பிடிக்கலாம் என்று சிஎஸ்கே கொஞ்சம் ஆர்வம் இல்லாதது போல இருந்தது. கடைசியில் மாறி மாறி போட்டி செல்ல.. ஒருவழியாக சிஎஸ்கே அணி 6.25 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை அணியில் மீண்டும் எடுத்தது.
5. சிஎஸ்கே அணிக்கு மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது. கேப்டன் தோனியால் மிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அஷ்வின் மீண்டும் தனது சொந்த மண்ணான சென்னைக்கு திரும்பி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு சென்று தற்போது கடும் போட்டிக்கு பிறகு அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி கைப்பற்றி உள்ளது.
6. அதேபோல் கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார்.
தோனி பிளானிங்:
1. இந்த சீசனில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிகம் வாங்கப்படுகின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோர் 20 கோடி ரூபாய்க்கு மேல் போய் உள்ளனர். இதை முன்பே கணித்தே சிஎஸ்கே அணி சிவம் துபேவை முன்கூட்டியே ரீட்டெயின் செய்தது.
2. அதேபோல் சில பாஸ்ட் பவுலர்கள்.. முக்கியமாக மார்க்க்யூ லிஸ்டில் இருக்கும் வீரர்களை சிஎஸ்கே கேட்டு அவர்களின் விலையை ஏற்றுவிட்டது. 8 கோடிக்கு மேல் அவர்களை கேட்காமல் சுதாரித்துக்கொண்டது.. அதே சமயம் விலை உயர்வை உறுதி செய்தது.
3. பெரிய அளவில் 10 கோடிக்கு மேல் அள்ளி கொடுக்காமலே பின் வரும் வீரர்களை சிஎஸ்கே எளிதாக அள்ளி உள்ளது.
நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்
விஜய் சங்கர் 1.2 கோடி ரூபாய்
இதேகாலம் மொத்தமாக சேர்த்தே கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய்தான் ஆகி உள்ளது. இதனால் இரண்டாம் நாள் இன்னும் சில பவுலர்களை எடுக்க சிஎஸ்கேவிற்கு சூப்பர் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications