Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் பிளே ஆப்: மிக மோசமான நிலையில் சிஎஸ்கே.. எத்தனை போட்டியில் வெல்லணும்! யாருக்கு வாய்ப்பு அதிகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் தொடர் இப்போது தான் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கிறது. இதற்கிடையே தற்போது வரை நடந்துள்ள லீக் போட்டிகளை வைத்து பார்க்கும் போது எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகம்.. எந்த அணிக்கு வாய்ப்பு சற்று குறைவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இப்போது அனல் பறக்கிறது. ஒவ்வொரு போட்டியும் கடைசி ஓவர் வரை வருவதால் எதிர்பார்ப்பு எகிறுகிறது. இப்போது பெரும்பாலான அணிகள் 4 போட்டிகளில் விளையாடிவிட்டன. தற்போதைய சூழலில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என்பது குறித்து பார்க்கலாம்.

IPL 2025 IPL CSK 2025

ஐபிஎல் பிளேஆஃப்

ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றை அடைய ஒரு அணி சராசரியாக 16 புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் 16 புள்ளிகளை பெற்றாலே அனைத்து அணிகளும் பிளேஆஃப் செல்லும் என உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் 16 புள்ளிகளை பெற்றிருக்கும். அதுபோன்ற சூழல்களில் நெட் ரன்ரேட் அடிப்படையில் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். சில நேரங்களில் 16 புள்ளிகளுக்கு குறைவான புள்ளிகளை பெறும் அணிகளும் கூட தகுதி பெறும்.

ஆனால், சராசரியாக ஒரு அணி 16 புள்ளிகளை பெற்றால் எளிதாக தகுதி பெறலாம். 16 புள்ளிகளை பெற ஒரு அணி 14 லீக் போட்டிகளில் குறைந்தது எட்டு போட்டிகளில் வெல்ல வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதல் போட்டிகளை வெல்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

புள்ளிப்பட்டியல்

இன்று (ஏப்ரல் 8 ) காலை நிலவரப்படி தோல்வியை பெறாமல் டெல்லி (விளையாடியது 3 போட்டிகள்; வென்றது 3 போட்டிகள்) முதலிடத்தில் இருக்கிறது. குஜராத் அணி (3ல் வெற்றி, ஒரு தோல்வி) இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், பெங்களூர் (3ல் வெற்றி, ஒரு தோல்வி), பஞ்சாப் (2ல் வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் டாப் 4 இடங்களில் உள்ளன.

தொடர்ந்து கொல்கத்தா (2ல் வெற்றி, 2 தோல்வி), லக்னோ (2ல் வெற்றி, 2 தோல்வி), ராஜஸ்தான் (2ல் வெற்றி, 2 தோல்வி) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 7ஆவது இடங்களை பிடித்துள்ளன. மும்பை (ஒரு வெற்றி, 4 தோல்வி), சென்னை (ஒரு வெற்றி, 3 தோல்வி), ஹைதராபாத் தொடர்ந்து கொல்கத்தா (ஒரு வெற்றி, 4 தோல்வி) கடைசி மூன்று இடங்களில் உள்ளன.

யாருக்கு வாய்ப்பு குறைவு

இதுவரை எந்தவொரு அணியும் ஐபிஎல் ப்ளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறவில்லை. அதேநேரம் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள ஹைதராபாத், சென்னை, மும்பை அணிகளுக்கு ப்ளேஆப் வாய்ப்பு கடினமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த 3 அணிகளுமே தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் 7 போட்டிகளில் வெல்ல வேண்டும். அப்போது தான் ப்ளேஆப் பற்றி நினைத்து கூட பார்க்க முடியும்.

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மீதமுள்ள போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெல்ல வேண்டும். அப்போது தான் எளிதாக ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லலாம்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்

மறுபுறம் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மிகவும் சவுகரியமான இடத்தில் உள்ளன. தோல்வியையே சந்திக்காத டெல்லி அணிக்கு இன்னும் 13 போட்டிகள் உள்ள நிலையில், அவர்கள் 5 போட்டிகளில் வென்றாலே போதும். 12 போட்டிகள் மீதமுள்ள குஜராத் அணியும் 5ல் வென்றால் போதும். அதேநேரம் மீண்டும் சொல்கிறேன்.. இந்த போட்டிகளில் வென்றாலே தானாக பிளேஆப் செல்வது உறுதியாகாது. புள்ளிப்பட்டியல் தான் முக்கியம். இருப்பினும், குறைந்தது 8 போட்டிகளில் வென்றால் பிளேஆப் வாய்ப்பு பிரகாசம் ஆகும்.

பிளேஆப் எப்போது

இந்தாண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மே 18ம் தேதி வரை லீக் சுற்றுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மே 20ம் தேதி முதலாவது குவாலிபையர் மற்றும் மே 21ம் தேதி முதலாவதி எலிமினேட்டர் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2வது குவாலிபையர் (மே 23) மற்றும் இறுதிப்போட்டி (மே 25) கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+