சுப்மன் கில் விட்டுக் கொடுப்பாரா? சாய் சுதர்சனுக்கு கிடைக்கும் முக்கிய ரோல்.. கம்பீர் எடுத்த முடிவு!
சென்னை: ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் உள்ளிட்டோர் இல்லாமல் முதல்முறையாக இளம் வீரர்களால் கட்டமைக்கப்பட்ட அணி விளையாட உள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 இன்னிங்ஸில் விளையாடி 6 அரைசதம், ஒரு சதம் உட்பட 759 ரன்களை விளாசி 4 விருதுகளை கைப்பற்றி இருந்தார். டி20 கிரிக்கெட் ஃபார்ம் மட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் சாய் சுதர்சனின் கவுண்டி கிரிக்கெட் ஃபார்மையும் பார்த்தே இந்திய தேர்வுக் குழு அவரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

சாய் சுதர்சன் பேட்டிங்
அதுமட்டுமல்லாமல் க்ரீஸை பயன்படுத்தி சாய் சுதர்சன் குவிக்கும் ரன்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது. கொஞ்சம் கூட ரன்கள் சேர்ப்பதே தெரியாமல் ரன்களை குவிப்பதில் வல்லரவாக சாய் சுதர்சன் இருக்கிறார். தமிழ்நாட்டின் வீரர்கள் இயற்கையாகவே தரையுடன் ஷாட்களை விளையாடுவார்கள். அதனால் சாய் சுதர்சனின் ஷாட்கள் எப்போதும் தரையோடு இருக்கும்.
நம்பர் 3 பேட்ஸ்மேன்
இதனால் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையை சாய் சுதர்சனுக்கு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இருவரும் நல்ல தொடக்க ஜோடியாக அமைந்துள்ளனர். அதேபோல் இடதுகை, வலதுகை காம்பினேஷனுக்கும் இது சரியாக பொருந்தி போகும். பவுலர்களின் திட்டத்தை எளிதாக ஒரு ரன் மூலமாக மாற்றி அமைக்க முடியும்.
சொதப்பும் சுப்மன் கில்
இதனால் சாய் சுதர்சனை நம்பர் 3ல் விளையாட அனுப்புவதே சரியான முடிவாக இருக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் நம்பர் 3ல் விளையாடி வருகிறார். ஆனால் நம்பர் 3ல் களமிறங்கிய சுப்மன் கில் வெளிநாடுகளில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு இன்னிங்ஸை கூட விளையாடவில்லை.
4வது வரிசையில் கில்
இதனால் விராட் கோலியின் நம்பர் 4ல் இடத்தில் சுப்மன் கில்லை களமிறக்குவது அவருக்கும், இந்திய அணிக்கு பயனளிக்கும். ஏனென்றால் நம்பர் 4 வீரராக களமிறங்கும் போது பந்து கொஞ்சம் பழையதாக மாறி இருக்கும். அதேபோல் பிட்சில் ஸ்விங்கும் குறைந்திருக்கும். இதனால் ஃபிளாட் ஃபிட்சில் சுப்மன் கில்லால் எளிதாக ரன்களை சேர்க்க முடியும்.
சாய் சுதர்சன் திறமை
இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சனை நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறக்க பயிற்சியாளர் கம்பீர் முடிவு எடுக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அதற்காகவே சாய் சுதர்சன் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நீண்ட நேரம் களத்தில் இருந்து சாய் சுதர்சனால் ரன்களையும் சேர்க்க முடியும், பவுலர்களையும் களைப்படைய வைக்க முடியும்.












Click it and Unblock the Notifications