சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி.. கோடிகளை அள்ளிய ரோஹித் சர்மா .. யாருக்கு எவ்வளவு பரிசு?
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி 3வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கும், 2வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கும் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி 3வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும், 2013ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலமாக கங்குலி, தோனிக்கு பின் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற 3வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் 76 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அதிக ரன்களை விளாசிய நியூசிலாந்து நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. அதேபோல் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கும், 2வது இடம்பிடித்த நியூசிலாந்து அணிக்கும் எவ்வளவு பரிசுத் தொகை அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்த கேள்விக்கு ஐசிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.59.90 கோடியாகும். இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகளுக்கும் குறைந்தபட்ச தொகையாக ரூ.1.08 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் சுற்றுடன் வெளியேறிய அணிகளில் 5 மற்றும் 6வது இடம் பிடித்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு தலா ரூ.3.04 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 7 மற்றும் 8 ஆகிய இடங்களை பிடித்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு தலா ரூ.1.21 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு தலா ரூ.4.86 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணிக்கு ரூ.9.72 கோடியும், முதலிடம் பிடித்து அசத்தியுள்ள இந்திய அணிக்கு ரூ.19.45 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை பிசிசிஐ சார்பாக வழங்கப்பட்டது. இதனால் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கும் பிசிசிஐ சார்பாக பரிசுத்தொகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications