30 ரன்களுக்கு காலியான டாப் ஆர்டர்.. எடுத்த முடிவில் உறுதியாக நின்ற கம்பீர்.. காப்பாற்றிய 2 வீரர்கள்!
துபாய்: இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் 30 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுத்த முடிவு, மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளது. நம்பர் 5ல் களமிறங்கிய அக்சர் படேல் 61 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்திய அணி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலும் எளிதாக வெற்றிபெற்றது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் எந்தவித சவால்களையும் இந்திய அணிக்கு அளிக்கவில்லை.

டாப் ஆர்டர் காலி
இதனால் நாக் அவுட் போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி சவாலான போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப நியூசிலாந்து அணியுடனான கடைசி லீக் போட்டி அமைந்துள்ளது. ஏனென்றால் டாப் ஆர்டர் வீரர்களான சுப்மன் கில் 2 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
களமிறங்கிய அக்சர் படேல்
இதன் காரணமாக இந்திய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் பிளே ஓவர்களுக்குள் இவ்வளவு விக்கெட்டுகளை இழந்ததால், விக்கெட்டை நிறுத்த வேண்டிய பொறுப்பும் அதே நேரத்தில் ரன் ரேட்டை குறையாமல் பார்த்து கொள்ளும் பொறுப்பு அடுத்த 2 பேட்ஸ்மேன்களின் பணியாக அமைந்தது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இருவரும் களத்தில் இருந்தனர்.
நிதான ஆட்டம்
ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இருவரும் எந்தவித பதற்றமும் இல்லாமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 7வது ஓவரில் தொடங்கி பார்ட்னர்ஷிப்பை சிறிது சிறிதாக கட்டமைத்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கில் இருந்து வெளியேறும் வரை எந்தவித ரிஸ்கையும் எடுக்கவில்லை. அதன்பின் 15 ஓவர்கள் கடந்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் விரைவாக ரன்களை சேர்த்தார்.
அக்சர் படேலும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் பவுண்டரியை அடிக்க, இருவரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை 25 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 75 பந்துகளில் அரைசதத்தை அடிக்க, இன்னொரு பக்கம் அக்சர் படேல் டாட் பால்களுக்கும் சேர்த்து ரன்களை குவிக்க அதிரடி காட்டினார்.
98 ரன்கள்
அக்சர் படேல் அதிரடியாக விளையாட முயற்சிப்பதை அறிந்த சான்ட்னர், ரச்சின் ரவீந்திராவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அதற்கேற்ப அவரை அட்டாக் செய்ய முயன்று அக்சர் படேல் 61 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 98 ரன்களில் உடைந்தது. இருப்பினும் இருவரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
கம்பீர் முடிவு
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிச்சயம் மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனின் அவசியத்தை அறிந்து அக்சர் படேலை நம்பர் 5ல் களமிறக்கி வந்தார். அதற்கான பலம் மிக முக்கியமான நேரத்தில் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. ஏனென்றால் ஓரூர்க், ஜேமிசன், ஹென்ரி உள்ளிட்ட 3 வேகப்பந்துவீச்சாளர்களும் இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன் இருக்கும் போது லைனை பிடிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் இந்திய அணி கம்பேக் கொடுத்ததற்கு கம்பீரின் முடிவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications