உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தொடங்கிய சிக்கல்.. தொடர்ச்சியாக 12வது முறை.. இந்திய அணிக்கு ராசியே இல்ல!
துபாய்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தொடங்கி இன்று நடக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் வரை தொடர்ச்சியாக இந்திய அணி 12 ஒருநாள் போட்டிகளில் டாஸில் மட்டும் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் டாஸ்-க்கும் கொஞ்சம் கூட ராசியே இல்லை என்று ரசிகர்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. வழக்கம் போல் பரம எதிரிகளான இந்த அணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதலே இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

துபாய் மைதானத்தில் பிட்ச் விளையாட விளையாட தொய்வடையும். இதனால் ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்காது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அழுத்தமான நேரங்களில் சொதப்பும் என்பதால், பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் செய்வதே சாதகமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இதனிடையே டாஸிலேயே இந்திய அணி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தொடங்கி இன்று நடக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் வரை நடந்துள்ள 12 போட்டிகளிலும் இந்திய அணி டாஸில் தோல்வியை சந்தித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை தொடர்ச்சியாக 12 முறை எந்த அணியும் டாஸில் தோற்றதில்லை.
இதற்கு முன்பாக நெதர்லாந்து அணி 2011ஆம் ஆண்டு மார்ச் முதல் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை தொடர்ச்சியாக 11 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோல்வியை சந்தித்ததே சாதனையாக இருந்தது. நெதர்லாந்து அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு பின் தென்னாப்பிரிக்கா தொடர், இலங்கை ஒருநாள் தொடர், இங்கிலாந்து ஒருநாள் ஆகியவற்றில் இந்திய அணி விளையாடியது.
இதில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டன்களுக்கும் டாஸ்-க்கும் கொஞ்சம் கூட ராசியே இல்லை என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். துபாய் மைதானத்தில் ஆட்டத்தின் வெற்றி தோல்வியில் டாஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனால் இனி வரும் போட்டிகளிலாவது இந்திய அணிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications