விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாதா.. என்ன சொன்னீங்க.. ஐஐடி பாபாவை தேடும் இந்திய ரசிகர்கள்!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடையும் என்றும், விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று கணிப்பை வெளியிட்ட ஐஐடி பாபாவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஐசிசி தொடரில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருவதால், ரசிகர்களும் இந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை காண்பதற்கு ஆவலாக இருந்தனர். இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெல்லும் என்று பலரும் தங்களின் கணிப்பை வெளியிட்டு வந்தனர்.

அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என்ற கேள்விக்கு ஐஐடி பாபா தனது கணிப்பை கூறி இருந்தார். அதில், போட்டி நடப்பதற்கு முன்பாகவே கூறிவிடுகிறேன்.. இந்திய அணி நிச்சயம் வெல்லாது. விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது. இந்தியா ஜெய்க்காது என்று சொல்லிவிட்டேன். அதனால் இனி இந்திய அணி வெல்லப் போவதில்லை.
நீங்கள் என்ன கடவுளை விட பெரியவரா? என்று கேள்வி எழுப்பினார். இவரின் பேட்டி சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. ஐஐடி பாபாவின் பதில் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐஐடி பாபா என்கிற அபே சிங் மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்துவிட்டு கனடாவில் பணியாற்றி வந்தவர்.
திடீரென மிகப்பெரிய ஊதியம் பெற்று வந்த பணியை உதறித் தள்ளிவிட்டு பாபாவாக மாறியவர். ஏற்கனவே 2024 டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்றும், ஹர்திக் பாண்டியா மீது ரோஹித் சர்மா நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சரியாக கணித்திருந்தார். இதனால் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஐஐடி பாபா சரியாக கணித்துள்ளாரா என்பதை பார்க்கலாம் என்று ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்த தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தே வெளியேறி இருக்கிறது. விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று ஐஐடி பாபா கூறிய நிலையில், விராட் கோலி முன் நின்று சதம் விளாசி சேஸிங்கை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐஐடி பாபாவை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர். மகா கும்பமேளாவில் நீராடினோமா, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தோமா என்று இருப்பதை விட்டுவிட்டு ஏன் இப்படி கிரிக்கெட் பக்கம் வந்து அவமானப்பட வேண்டும் என்று ஐஐடி பாபாவை ரசிகர்கள் ஜாலியாக ட்ரால் செய்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications