பாபர் அசாம் அல்ல.. பாகிஸ்தானின் 2 முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தணும்.. எல்லாமே முகமது ஷமி கைகளில்!
மும்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பார்க்கலாம். பாகிஸ்தான் அணியின் பவுலர்களுக்கும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான ஆட்டமாக இது அமைந்துள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், சாவுத் சக்கீல் ஆகிய இருவரும் அபாயகரமான பேட்ஸ்மேன்களாக உருவாகி இருக்கின்றனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. என்னதான் ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அதிக போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தாலும், இம்முறை பாகிஸ்தான் அணி எழுச்சிபெறும் என்று பெரும்பாலான ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு பாகிஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வியே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் பாகிஸ்தான் அணியின் பவுலர்களுக்கும் இடையிலான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சோதனையாக இருப்பார்கள்.
இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் புதிய பந்தில் ஷாகின் அப்ரிடியின் ஸ்விங்கும், நசீன் ஷாவின் வேரியேஷனும் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் போன்ற ஆட்டக்காரர்களையே சோதிக்கும். அதேபோல் ஹாரிஸ் ராஃப் போன்ற பவுலர்கள் என்ன நேரத்தில் என்ன செய்வார்கள் என்று தெரியாது.
புதிய பந்தில் அவரின் கூடுதல் வேகம் அட்டாக்கிங் ஷாட்களை ஆடக் கூடிய பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். இதனால் பவர் பிளே ஓவர்களில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ரோஹித் சர்மா இந்த போட்டியில் அட்டாக் செய்தாலும், கூடுதல் கவனத்துடன் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பயனை கொடுக்கும்.
ஏனென்றால் 15 ஓவர்களை ரோஹித் சர்மா கடந்துவிட்டாலே, அவரால் எளிதாக 35 ஓவர்கள் வரை களத்தில் நிற்க முடியும். ஒருவேளை அவர் விக்கெட்டை பறிகொடுத்தால் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் 35 ஓவர்கள் வரை களத்தில் நின்று இந்திய அணியின் பேட்டிங்கை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் பவுலிங்கில் தொடக்க வீரர்களை மட்டும் வீழ்த்தி முகமது ஷமி மற்றும் ஹர்சித் ராணா அட்டாக் செய்தாலே போதுமானது. அதன்பின் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் துபாய் மைதானத்தில் போதுமான சேதாரத்தை செய்துவிடுவார்கள். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் சக்கீல் ஆகியோரை கட்டுப்படுத்தினாலே இந்திய அணியால் எளிதாக வீழ்த்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications