துபாய் போக முடியலனா என்ன? ஸ்டேடியம் பீலில் சென்னையிலேயே IND vs Pak போட்டியை பார்க்கலாம்.. எப்படி?
சென்னை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை நேரலையில் பார்ப்பதற்கு சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. வழக்கமாக இரு அணிகள் மோதினாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்டம் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது.

அங்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கு சரிக்கு சமமாக ரசிகர்களின் ஆதரவு இருக்கும். அதேபோல் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு, இந்திய அணி பழிதீர்க்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்தே நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கும் சூழல் ஏற்படும். இதனால் பரபரப்பு மிகுந்த இந்த ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்று இன்று காலை முதலே சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் நேரலையாக பார்க்க முடியும். என்னதான் வீட்டில் இருந்தவாறு பார்த்தாலும், நண்பர்களுடன் ரசிகர்களுடன் பார்க்கும் அனுபவம் வேறுதான். கிட்டத்தட்ட ஒரு திருவிழாவை போன்ற சூழல் நேரில் பார்க்கும் போது நிகழ்த்தப்படும். போட்டியின் ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்களின் ரியாக்சனை பார்க்க முடியும்.
அந்த அனுபவத்தை உணர முடியும். இதற்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை எல்இடி ஸ்க்ரீனில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெசண்ட் நகர் நகர் போலீஸ் பூத் அருகிலும் எல்இடி ஸ்க்ரீன் வாயிலாக நேரலை செய்யப்படுகிறது.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வெயில் குறைந்த பின் மாலை நேரத்தில் சென்று கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கலாம். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், கடற்கரையில் மக்கள் இப்போது முதலே குவியத் தொடங்கியுள்ளனர். இந்த கூட்டம் மாலை நேரத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications