இந்தியா - பாக் ஆட்டமே விறுவிறுப்பு இல்லையே.. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சுவாரசியம் இழக்கிறதா? ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி.. ஆன்லைன், ஆப்லைன் என்று பல கோடி பேர் பார்த்தும் கூட.. பெரிதாக மக்களை ஈர்க்கவில்லை. சப்பென்று முடிந்தது என்று சொல்லும் அளவிற்கு.. கோலி அடித்த சதத்தை தவிர பெரிதாக ஆட்டத்தில் சுவாரசியம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

நேற்று பாகிஸ்தான் நிர்ணயம் செய்த 242 ரன்களை இந்தியா எளிதாக எட்டியது, 7.3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் எளிதாக கோலி சதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறுவது உறுதியாகிவிட்டது.

champions trophy 2025 IND vs PAK 2025

பாகிஸ்தான் அணி எலிமினேஷன் ஆவது உறுதியாகி உள்ளது. நேற்று பேட்டிங்கில் கோலி (100*), ஷ்ரேயாஸ் ஐயர் (56), ஷுப்மான் கில் (46) ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். பந்து வீச்சில், குல்தீப் யாதவ் 3/40 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா இன்னும் பாகிஸ்தானிடம் தோற்கவே இல்ல. அந்தப் போட்டிக்குப் பிறகு வரிசையாக 6-0 என்று இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று பாகிஸ்தான் அணியில் ஷகீல் மட்டும் 62 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் அவுட் ஆனது இந்திய அணிக்கு சாதகமாக மாறியது.

இந்தியா வென்றாலும் ஆட்டத்தில் சூடு இல்லை. இந்த ஆட்டம் என்று இல்லை கடந்த சில வருடங்களாக ஒருநாள் ஆட்டங்கள் பெரிதாக யாரும் ஈர்ப்பது இல்லை. அதிலும் பலரும் முதல் 5 ஓவர்கள் அதன்பின் இன்னிங்ஸ் முடியும் நேரம். பின்னர் மீண்டும் ஆட்டத்தின் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே போட்டியை காணும் நிலை உள்ளது. இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் பெரிதாக ஆட்டங்கள் எதுவும் ஈர்க்கவில்லை. இப்படி ஒருநாள் போட்டிகள் பெரிதாக ஈர்க்காமல் போனதற்கு பின் காரணங்கள் உள்ளன.

1. இப்போதெல்லாம் ஓடிடி தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு விஷயத்தை கருத்தில் கொள்வது உண்டு. PIP மோடில் உங்கள் படம், சீரிஸ் எப்படி இருக்கும். அதாவது இப்போதெல்லாம் ஒரு ஓடிடி தொடரை யாரும் முழு ஸ்கிரீனில் பார்ப்பது இல்லை. அதை மினிமைஸ் செய்துவிட்டு.. பெரிய ஸ்கிரீனில் சமூக வலைத்தளங்களில் சுற்றுகிறார்கள். மினிமைஸ் ஸ்கிரீனில் மட்டும் ஓடிடி தொடரை பார்க்கிறார்கள்.

2. நெட்டிசன்கள் இப்படி PIP மோடில் படம் பார்ப்பதால் அவர்களுக்கு பெரிதாக ஈர்ப்பு இருப்பது இல்லை. இதனால் தயாரிப்பு நிறுவனங்களே.. உங்கள் கதை PIP மோடில் பார்க்கும் போது எப்படி இருக்கும்? விறுவிறுப்பாக இருக்குமா? PIP பார்க்கும் போது கவனம் சிதறாமல் இருக்குமா என்ற கேள்விகளை வைக்கின்றன.

3. இப்போது இதே பார்முலாதான் கிரிக்கெட்டிற்கும். PIP மோடில் பார்க்கும் அளவிற்கு ஒருநாள் போட்டிகள் சுவாரசியமாக இல்லை. டி 20 போட்டிகள் PIP மோடில் பார்த்தாலும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஒரு சில கட்டங்களை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் PIP மோடில் பார்க்கும் அளவிற்கு சுவாரசியம் இல்லை.

4. அதேபோல் இப்போது இன்ஸ்ட்டா காலம். 2 நிமிடம் வீடியோக்கள் கூட போர் அடிக்கும் காலம். இன்ஸ்ட்டா ரீல்ஸ் போல 90 நொடிகளில் எதையும் சொல்ல வேண்டும். இதனால் ஆர்வம் இல்லாத சூழல் உள்ளது.

5. இது மக்கள் இடையே attention பிரச்சனைகளை கொண்டு வந்துவிட்டது. இதுவே ஒருநாள் போட்டிகள் போன்ற ஆட்டங்கள் ஆர்வமின்றி போக காரணம்.

6. ஆனால் டெஸ்ட் போட்டிகள் இதற்கு எதிர்மாறாக.. இதை எல்லாம் உடைத்து சுவாரசியம் ஆகி உள்ளது. 5 நாட்கள் நடந்தாலும் இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகாமல் ரிசல்ட் வருகிறது.

7. ஒவ்வொரு ஓவரும் திக் திக் என்று இருக்கிறது. 2000 களில் டெஸ்ட் போட்டிகளில் 4ல் ஒன்று ரிசல்ட் வந்தாலே ஆச்சர்யம்.

8. ஆனால் இப்போது ஆடும் முறை மாறிவிட்டதால் டெஸ்ட் போட்டிகள் சுவாரசியம் ஆகிவிட்டது.

9. டி 20 போட்டிகள் டெஸ்ட் போட்டிகளை காலி செய்யும் என்ற வாக்கு பொய்த்துவிட்டது.

10. மாறாக டி 20 போட்டிகள் ஒருநாள் போட்டிகளை காலி செய்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+