சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு.. பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத விவகாரம்.. சாடும் மஞ்ச்ரேக்கர்!
கொழும்பு: இந்தியா அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் தவிர்க்கும் நிலைப்பாட்டை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக சாடியுள்ளார். இந்திய வீரர்களின் இந்த போக்கு சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியா போன்ற நமது நாட்டுக்கு இப்படியான நிகழ்வுகள் அழகல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடரின் போதே இப்படியான சர்ச்சைகள் அரங்கேறின.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசியல் மோதலை விளையாட்டின் மூலமாக தணிக்காமல், அதில் எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாக விமர்சனங்கள் அதிகரித்தன. இதனிடையே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, இந்திய அணி வீரர்கள் எங்களுடன் கைகுலுக்க முன் வந்தால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டுமோ, அப்படியே விளையாட வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இருக்கும் நிலைப்பாட்டில் தொடரலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் இந்த நிலைப்பாட்டை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக சாடி இருக்கிறார். இதுதொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், இந்திய அணியின் போக்கு சிறுபிள்ளைத்தனமானது.
இந்தியா போன்ற கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும்நமது நாட்டுக்கு இப்படியான செயல்கள் அழகல்ல. கிரிக்கெட்டை விளையாட்டு உணர்வுடன் மட்டுமே விளையாட வேண்டும். அப்படி இல்லையென்றால், விளையாடாமல் தவிர்த்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து இந்திய ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வருகிறது.
ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு என்பது அனைவரையும் இணைக்க வேண்டுமே தவிர, யாரிடமும் வன்மத்தை விதைக்க கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியுடன் விளையாடக் கூடாது என்று பாகிஸ்தான் அரசு ஒரு நிலைப்பாட்டை கூறியுள்ள சூழலில், ஐசிசியின் எச்சரிக்கையால் மாற்றிக் கொண்டது. இதனால் களத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications