இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. மழை குறுக்கிட சான்ஸ் இருக்கா? துபாயில் கிளைமேட் எப்படி
துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் இன்று நடைபெறும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறும் போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில், போட்டி நடைபெறும் துபாயில் மழைக்கு வாய்ப்புள்ளதா? என்பது பற்றிய வானிலை விவரங்கள் வெளியாகியுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் லீக் போட்டியில் கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் உலகில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி
அதிலும் சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளும் மோதிக்கொள்வதால் இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவுக்கு இது இரண்டாவது லீக் ஆட்டம் ஆகும். ஏற்கனவே முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆட்டம் நடைபெற்று வருகிறது. எனினும் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்து உள்ள நிலையில், இந்த போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதா? தட்ப வெப்ப நிலை எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா?
இன்று துபாயில் மழை பெய்வதற்கான வாய்ப்பு சிறிதளவு கூட இல்லை என்பது வானியல் தரவுகள் காட்டுகின்றன. எனவே, இன்றைய போட்டிக்கு மழையால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஏதாவது அதிசயம் நடந்தால் தவிர மழைக்கான வாய்ப்பு என்பது இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் கூட மழை பெய்த போதும் இன்று மழைக்கான வாய்ப்பு இல்லை.
காற்றின் ஈரப்பதம் 48 சதவீதம் அளவுக்கு இருக்கும். வானம் தெளிவாகவும் மேகமூட்டம் இன்றியும் காணப்படும் எனவும் சூரியன் மாலை 6.17 மணிக்கு மறையும் எனவும் துபாய் வானிலை தரவுகள் கூறுகின்றன. ஒரு வேளை மழை குறுக்கிட்டு போட்டி நடைபெறாமல் போனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.
இந்தியா வெற்றி பெறுமா?
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் அகும். அதேவேளையில், முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதனால், அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். இதனால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சென்னை மெரினாவில் ஏற்பாடு
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் போட்டியின் நேரடி ஒளிபரப்பை பிரமாண்டமான எல்.இ.டி திரையில் காண மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு இல்லத்துக்கு எதிர்புறத்தில் மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள போலீஸ் பூத் அருகிலும் ராட்சத திரையில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம்












Click it and Unblock the Notifications