கடைசி நொடியில் அவசர அவசரமாக ஓடி வந்த இந்திய அணி.. பாகிஸ்தான் போட்டியில் திடீர் பரபரப்பு! என்னாச்சு?
துபாய்: சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்த நிலையில், இந்திய அணியின் பேருந்து சரியான நேரத்தில் மைதானத்திற்கு வந்தடையாததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அணி வந்த பேருந்து என்ன ஆனது.. கடைசி நொடியில் இந்திய வீரர்கள் அடித்துப் பிடித்து மைதானத்திற்கு வர என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதிக்கவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி
இதனால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா தான் விளையாடும் எல்லா போட்டிகளையும் துபாயிலேயே விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றியைப் பதிவு செய்தது. இரண்டாவது போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் எப்போது எங்கு மோதினாலும் அந்த போட்டியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். இன்றைய போட்டியிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக மைதானத்தில் குவிந்தனர்.
சரியான நேரத்திற்கு வராத இந்திய அணி
இதற்கிடையே பாகிஸ்தான் அணியுடனான போட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே இந்திய அணி மைதானத்தை வந்தடைந்ததாகப் பிரபல ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இரு அணிகள் வந்த பேருந்துகளும் திடீரென தாமதமானதாகவும் இருப்பினும் பாகிஸ்தானின் பேருந்து முதலில் மைதானத்தை வந்தடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய அணி போட்டி தொடங்க வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே இருந்த போதே மைதானத்தை அடைந்துள்ளனர்.

என்ன காரணம்
ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு இரு அணிகளுமே வழக்கம் போல பேருந்துகளில் கிளம்பியுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாகச் செல்லும் வழியில் துபாயில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்திய அணி தாமதமாக வந்து சேர காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பயிற்சியாளர் டீமில் இருந்த த்ரோ-டவுன் நிபுணர்கள் இருவர் மட்டுமே தனியாகக் கிளம்பியதால் சீக்கிரம் மைதானத்திற்கு வந்துவிட்டனர்.
இருப்பினும், இந்திய அணி டிராபிக்கில் வந்ததால் அவர்கள் வந்து சேர தாமதம் ஆகியுள்ளது. இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை இரு த்ரோ டவுன் நிபுணர்களும் மைதானத்தில் காத்திருக்க வேண்டி இருந்துள்ளது. இப்படி கடைசி நிமிடத்தில் அடித்துப் பிடித்து இந்திய அணி மைதானத்திற்கு வந்தாலும் கூட பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா வேற லெலவ் ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.
இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. இப்போது வரை அனைத்து டீம்களும் தலா ஒரு போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் ஒரு வெற்றியுடன் முதல் இரு இடங்களில் வென்றுள்ளன. இந்தியா அணி இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும். மறுபுறம் பாகிஸ்தான் தோல்வி அதன் அரையிறுதி வாய்ப்பை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications