Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் தொல்லை... சாலையில் அலறிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனைகள்.. சிக்கிய இந்தூர் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் மகளிருக்கான 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய அணியின் 2 வீராங்கனைகளை பின்தொடர்ந்து சென்று இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரை தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி இந்த போட்டி தொடங்கியது. நவம்பர் 2ம் தேதி பைனல் போட்டி நடைபெற உள்ளது. தற்போது லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.

indore-man-arrested-for-allegedly-molesting-australian-womens-odi-cricketers

இன்று காலை நிலவரப்படி ஆஸ்திரேலியா மகளிர் அணி 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா மகளிர் அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்து அணி 9 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்திய அணி 6 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன. இந்த 4 அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் தான் இன்று ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடம் செல்லும். இதனால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே தான் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் வீராங்கனைகளை பின்தொடர்ந்து சென்று இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ரேடிசன் புளு ஹோட்டலில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் காலையில் 2 வீராங்கனைகள் ஹோட்டலில் இருந்து அருகே உள்ள ‛கபே'வுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் வீராங்கனைகளை பின்தொடர்ந்து சென்றுள்ளதோடு, வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடக்கூடாத இடங்களை தொட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வீராங்கனைகள் அலறியுள்ளனர். இதையடுத்த அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார்.

இதுபற்றி உடனடியாக வீராங்கனைகள் அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்சுக்கு தகவல் அளித்தனர். அவர் விரைந்து சென்று வீராங்கனைகளை அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு சம்பவம் குறித்து எம்ஐஜி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பாலியல் தொல்லை கொடுத்த நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அவர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரித்து இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் அகில் கான் என்பதும், அவர் மீது பல வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அகில் கான் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 74 (பெண்களை மானப்பங்கம் படுத்துதல்), 78 (பின்தொடர்ந்து செல்லுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+