போச்சு! இவர்களை உடனே தூக்கி அடிங்க.. அதுவரைக்கும் சிஎஸ்கே தேறாது.. சிக்கலாக மாறிய 3 வீரர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் கவுஹாத்தியில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பி வருகின்றனர்.

கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அதே போல் இந்த ஆட்டத்திலும் சில பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பிக்கொண்டு இருக்கின்றனர்.

ராஜஸ்தான் பேட்டிங்

இன்று மேட்ச் தொடங்கியதில் இருந்தே ராஜஸ்தான் அணி வேகமாக ஆடியது. எந்த இடத்திலும் சுணக்கம் காட்டாமல்.. ராஜஸ்தான் வேகம் காட்டியது. முக்கியமாக நிதிஷ் ராணா ஸ்பின் பவுலர்களை டார்கெட் செய்து அடித்தார். நிதிஷ் ராணா இதனால் அஸ்வின் தொடங்கி சிஎஸ்கேவின் ஸ்பின் படையை மாறி மாறி சிக்ஸ், பவுண்டரி அடித்து வெளுத்து கட்டினார்.

IPL 2025 CSK batting line up is again worse against Rajasthan Royals

இவர் ஏற்கனவே கொல்கத்தா அணியில் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக பயிற்சி எடுத்தவர். இதனால் இன்று வசமாக நூர், அஸ்வின் என்று எல்லோரையும் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் எல்லாம் அடித்து பிரஷர் போட்டார். இவருக்கு பயந்தே ஜடேஜாவிற்கு ஓவர் கொடுக்காமல் சிஎஸ்கே பிரஷர் போட்டது. இருந்தாலும் இன்று 81 ரன்கள் இருக்கும் போது அஸ்வின் போட்ட வைடு பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்பிட் ஆனார்.

ஒரு பக்கம் ராணா அவுட் ஆனாலும் இன்னொரு பக்கம் லோக்கல் பாய் ரியான் பராக் விடாமல் விளாசினார். ரியான் பராக் ஆடிய விதத்தை பார்க்க.. அவர் கண்டிப்பாக அணியை 200 ரன்களுக்கு கொண்டு செல்வார் என்றே கருதப்பட்டது. ஆனால் 18வது ஓவரில் பாத்திரனா போட்ட பந்தில் லோக்கல் பாய் ரியான் பராக் போல்ட் ஆனார்.

அதன்பின் இறங்கிய ஹெட்மயர் 19 ரன்கள் எடுத்தார். அதை தவிர மற்ற வீரர்கள் வரிசையாக அவுட் ஆன நிலையில் 200 ரன்கள் எடுக்க வேண்டிய ராஜஸ்தான் அணி 182-9 ரன்கள் எடுத்து 183 ரன்களை சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயம் செய்தது.

சிஎஸ்கே பேட்டிங்

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அதே போல் இந்த ஆட்டத்திலும் சில பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பிக்கொண்டு இருக்கின்றனர்.

Take a Poll

எப்போதும் ஆடும் ரச்சின் இன்று டக் அவுட் ஆனார். அவரை முதல் 2 போட்டிகளில் நன்றாக ஆடினார். ஆனால் மற்ற வீரர்கள் இன்றும் சொதப்பினார்கள். திரிபாதி 23 ரன்களுக்கு அவுட் ஆனார். அவர் கொஞ்சம் ஸ்பீடு ஏற்றினாலும் தொடக்கத்தில் மோசமாக திணறினார்.

10 பந்துகள் பிடித்த துபே 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். திரிபாதி, துபே இரண்டு பேருமே பார்மில் இல்லை. இரண்டு பேருக்குமே பந்து சரியாக கனெக்ட் ஆகவில்லை. இவர்களின் வருகை அணிக்கு பெரிய அளவில் உதவவில்லை. கடந்த சீசனிலேயே கொஞ்சம் துபே பார்ம் இழந்தார். பேட்டிங்கில் துபே, ராகுல்.. சில போட்டிகளுக்கு ரச்சினுக்கு பதிலாக கான்வேவை கொண்டு வருவது சரியான முடிவாக இருக்கும். இந்த சீசனில் இன்னும் அவரின் ஆட்டம் மோசமாகி உள்ளது. இவர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+