டிக்கெட் விற்காமல் கிடக்கு.. நான் சொல்ற மாதிரி சொல்லு.. ரசிகர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியதா சிஎஸ்கே?
சென்னை: சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக ஊடக வலைத்தளங்கள் வழியாக சிஎஸ்கே ரசிகர்ளிடம் பொய் சொல்லி ஏமாற்றியதாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. முதலில் இறங்கிய டெல்லி அணி 183/6 (20) ரன்கள் எடுத்தது. கே.எல் ராகுல் 77 ரன்கள் எடுத்து அசால்ட்டாக சிஎஸ்கே அணிக்கு பிரஷர் போட்டார்.

அவரை அடுத்து இறங்கிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் சீட்டு கட்டு போல சரிந்தது. விஜய் சங்கர் மட்டும் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி 26 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்கள் கூட எடுக்காத நிலையில் சிஎஸ்கே அணி மோசமாக படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகளில் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் வரிசையாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது.
ஏமாற்றிய சிஎஸ்கே நிர்வாகம்
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக ஊடக வலைத்தளங்கள் வழியாக சிஎஸ்கே ரசிகர்ளிடம் பொய் சொல்லி ஏமாற்றியதாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் ஆட்டத்திற்கு முன்பாக முதல் நாள் முழுக்க.. ஆட்டத்தின் அன்றும் டிக்கெட் எடுக்கும் நேரத்தில்.. மேட்ச்சிற்கு முன்புவரை சிஎஸ்கே அணியை தோனி வழிநடத்த போவதாக செய்திகள் வந்தன. ஆனால் இதை சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் எதிர்கொண்ட விதம்தான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ருத்துராஜ் காயம் காரணமாக பயிற்சி எடுக்கவில்லை. இரவு வரை அவர் பயிற்சி எடுக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் கையில் ஏற்பட்ட காயத்தால் அவர் ஆடுவது சிரமம் ஆகி உள்ளது. இதனால் சிஎஸ்கேவிற்கு மீண்டும் தோனி கேப்டன் ஆகும் சூழல் ஏற்பட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகின. சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் இதை வரவேற்று கொண்டாடி உள்ளனர்.
டிக்கெட் விக்காம கெடக்கு.., நான் சொல்ற மாதிரி சொல்லு..! pic.twitter.com/dJwnpWsodG
— Ɗ Ơ Ɲ ᴹᴵ 🏂 (@itz_don_) April 4, 2025
ருத்துராஜ் சிஎஸ்கே பார்ம் பேட்ஸ்மேன். இப்போது பார்மில் உள்ள டாப் பேட்ஸ்மேன் இவர் மட்டுமே. ஆனால் இவரை காயத்திற்காக சிஎஸ்கே ரசிகர்கள் வருந்தவில்லை. ருத்துராஜ் போனதும் தோனி வருகிறார் என்ற சந்தோசமே பல ரசிகர்களுக்கு மேலோங்கி உள்ளது. இது தவறான மனநிலை. ருத்துராஜ் போன்ற இளம் வீரருக்கு இப்படி ஆகும் போது அதை பற்றி பேசாமல் தோனி வருகையை கொண்டாடுவது தவறான முன்னுதாரணம் .. தவறான மனநிலை.
டிக்கெட் விற்க மோசம்
இப்படிப்பட்ட நிலையில்தான் டிக்கெட்டை விற்க சிஎஸ்கே நிர்வாகம் இப்படி பிரச்சாரம் செய்ததாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சிஎஸ்கே போட்டிகளுக்கு சென்னை சேப்பாக்கத்தில் டிக்கெட் பெரிய அளவில் விற்காத நிலை இருந்தது. முக்கியமாக டிக்கெட் விலை அதிகமாக இருந்ததாலும் பிளாக்கில் டிக்கெட் விற்றதாலும் டிக்கெட் விற்க முடியாத சூழல் இருந்தது.
இதையடுத்தே அதிக விலைக்கு அதிக டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்பதற்காக தோனி கேப்டன்சி செய்ய போகிறார்.. அவர் இந்த ஆட்டத்தோடு ஓய்வு அறிவிக்க போகிறார் சிஎஸ்கே நிர்வாகம் சில கிரிக்கெட் விமர்சகர்கள், பிரபலங்கள் வழியாக புரளியை கிளப்பி விட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி வரப்போகிறார் என்று புரளியை கிளப்பி விட்டு இதன் மூலம் டிக்கெட்டுகளை தாறுமாறாக விற்றதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications