பிரதமர் மோடி, ஜெய் ஷாவை அவமதித்த ஸ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ நடத்தும் அரசியல்.. பக்கா கேப்டன்யா நீ!
சென்னை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை ஆடியுள்ள 2 போட்டிகளிலும் பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. அதேபோல் இந்திய ஒயிட் பால் அணியின் அடுத்த கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் முதல் 3 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி ஆகிய 3 அணிகள் முன்னிலையில் உள்ளன. இந்த 3 அணிகளும் இதுவரை ஆடியுள்ள 2 போட்டிகளிலும் வென்று அசத்தி இருக்கிறது. இதில் ஆர்சிபி மற்றும் டெல்லி ஆகிய அணிகளை விடவும் பஞ்சாப் கிங்ஸ் அணி அதீத பலத்துடன் இருக்கிறது.

பஞ்சாப் வெற்றி
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு, நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கி 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். முதல் லீக் போட்டியிலும் சதத்தை விடவும் அணியின் வெற்றியையே முன்னிலைப்படுத்தி இருந்தார்.
சிறந்த கேப்டன்
ரிஷப் பண்ட், சுப்மன் கில், அக்சர் படேல், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதார் உள்ளிட்டோரை விடவும் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஃபீல்டிங் மாற்றங்கள், பவுலர்கள் மாற்றம், பேட்ஸ்மேன்களுக்கான திட்டம், பேட்டிங் வரிசை மாற்றம் என்று அத்தனையிலும் ஸ்ரேயாஸ் ஐயரின் செயல்பாடுகள் அபாரமாக உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவம்
இதனால் ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் அடுத்த ஒயிட் பால் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முன்பாக இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தயார் செய்யப்பட்டார். அந்த அனுபவம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது மிகப்பெரிய பலனை கொடுத்துள்ளது.
பிசிசிஐ ஒப்பந்தம்
இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக பிசிசிசி நிர்வாகத்தால் பழிவாங்கப்படுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் கடந்த ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதோடு, அவரிடம் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவரின் விளக்கத்தையும் பிசிசிஐ ஏற்கவில்லை. இந்திய அணியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார்.
பிசிசிஐ நெருக்கடி
இதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ நெருக்கியது. எதற்கும் அசராத ஸ்ரேயாஸ் ஐயர், ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி என்று அத்தனை தொடர்களிலும் கோப்பையை வென்று கம்பேக் கொடுத்தார். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரராக சாதனை படைத்தார்.
உலகக்கோப்பை சர்ச்சை
இருந்தாலும் இந்திய அணியின் ஒப்பந்தம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்குவதில் தயக்கம் காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பை தொடரின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் கை குலுக்காததும், அவர் முன் கம்பீரமாக நின்றதுமே காரணமாக பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சை
உலகக்கோப்பை தோல்விக்கு பின் பிரதமர் மோடியுடன் அனைவரும் கை குலுக்கிய போது, ஸ்ரேயாஸ் ஐயர் கை குலுக்காமல் நின்றார். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்கு பின் அனைவரும் ஜெய் ஷாவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது, ஸ்ரேயாஸ் ஐயர் அவரை கண்டுகொள்ளவில்லை. பிசிசிஐ தலைவர் பின்னி கூட அவருக்கு சரியாக கோர்ட்-ஐ அணிவித்துவிடவில்லை.
பெருகும் ரசிகர்கள் ஆதரவு
இதனால் பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் பழிவாங்கப்படுவதாக ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications