3 வெளிநாட்டு வீரர்கள் இல்லைனா என்ன.. அசராமல் வேடிக்கை பார்க்கும் மும்பை.. அம்பானி செய்த பலே திட்டம்!
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் மே 17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் இந்தியா வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. மே 29ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் தொடங்க உள்ளது. அதேபோல் ஜூன் 11 முதல் 15 வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இதனால் அந்தந்த நாட்டின் கிரிக்கெட் வாரியங்கள் தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அனுப்ப முன் வரவில்லை. குஜராத் அணிக்காக விளையாடி வரும் பட்லர், ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், ஹேசல்வுட், டிம் டேவிட், சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சாம் கரண், ஜேமி ஓவர்டன், டெல்லி அணிக்காக விளையாடி வரும் மிட்சல் ஸ்டார்க், ஸ்டப்ஸ் ஆகியோர் வர மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் கிளாசன், கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் குயின்டன் டி காக், லக்னோ அணிக்காக ஆடி வரும் மார்க்ரம், மிட்சல் மார்ஷ், டேவிட் மில்லர் ஆகியோரும், ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஆர்ச்சர் ஆகியோரும் மீண்டும் இந்தியா வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டு வீரர்களின் கடைசி நேர ட்விஸ்ட் காரணமாக பாதிக்கப்படாத ஒரே அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான். ஏனென்றால் அந்த அணியில் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், கார்பின் பாஸ்ச் மற்றும் பட்லர் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் வந்தனர். இதில் போல்ட் நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தை துறந்து வெகு நாட்களாகிவிட்டது. இதனால் போல்ட் வருவதில் எந்த சிக்கலும் கிடையாது.
ஆனால் வில் ஜாக்ஸ் இங்கிலாந்து அணியிலும், ரிக்கல்டன் மற்றும் பாஸ்ச் இருவரும் தென்னாப்பிரிக்கா அணியிடம் இடம்பிடித்துள்ளனர். இதனால் அவர்கள் மூவரும் மே 25ஆம் தேதிக்கு மேல் இருப்பதில் சிக்கல் உள்ளது. ஆனாலும் மும்பை அணியால் எளிதாக இந்த 3 வீரர்களின் இடத்தையும் நிரப்ப முடியும் என்று பார்க்கப்படுகிறது.
உள்ளூர் வீரர்கள் பலரையும் மும்பை அணி கைவசம் வைத்துள்ள நிலையில், எஸ்ஏடி20 லீக் தொடரில் ஆடிய வீரர்கள் எந்தெந்த வீரர்கள் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடவில்லை என்று தேடி வருகிறது. இதனால் மும்பை அணி நிச்சயமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதோடு, 6வது கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications