அந்த நொடி.. சுயாஷ் சர்மா கைக்கு சென்ற பந்து.. கேப்டனாக ஜெயித்த ரஜத் பட்டிதார்.. நோட் பண்ணுங்க!
கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிராக கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணியின் ரஜத் பட்டிதார் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஏனென்றால் முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 107 ரன்களை விளாசிய நிலையில், அடுத்த 10 ஓவர்களில் வெறும் 67 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி தவித்து வருகிறது. விராட் கோலி போன்ற ஜாம்பவான் கேப்டனாக இருந்த போதும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் மற்ற அணி ரசிகர்களால் ஆர்சிபி அணி அதிகமாக கிண்டல் செய்யப்படும். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் பொறுப்புக்கு வந்துள்ளார்.

கேகேஆர் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே ரஜத் பட்டிதாரின் கேப்டன்சி பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனென்றால் முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 107 ரன்களை விளாசிய நிலையில், அடுத்த 10 ஓவர்களில் வெறும் 67 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் ஆர்சிபி அணியின் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி கொஞ்சம் கூட சிந்திக்காமல் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். ஏனென்றால் நீண்ட பேட்டிங் வரிசை இல்லாதது அந்த அணிக்கு பிரச்சனையை உருவாக்கி இருந்தது. தற்போது க்ருணால் பாண்டியாவே 8வது பேட்ஸ்மேனாக வருவதால், விராட் கோலி தைரியமாக அதிரடியாக ஆட வழிவகுத்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் பவுலிங்கில் செய்த மாற்றம் ஆட்டத்தையே மாற்றி இருக்கிறது. அதாவது க்ருணால் பாண்டியா வீசிய முதல் ஓவரில் 15 ரன்களை விட்டுக் கொடுத்த போதும், கொஞ்சம் கூட பயமோ, சந்தேகமோ இல்லாமல் மீண்டும் 11வது ஓவரில் அட்டாக்கில் கொண்டு வந்தார். அவரும் அதற்கேற்ப விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கையை காப்பாற்றினார்.
அதேபோல் சுயாஷ் சர்மா வீசிய 9வது ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டது. ஆனால் 12வது ஓவரில் 14 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி ஒரு ஓவர் மட்டுமே இருந்த போது, ரஸ்ஸலின் வருகைக்காக சுயாஷ் சர்மாவை பதுக்கி வைத்தார். லிவிங்ஸ்டன் உள்ளிட்ட ஸ்பின் பவுலர்கள் இருந்த போதும், ரஸ்ஸல் களமிறங்கிய உடன் கொஞ்சம் கூட யோசிக்காமல் சுயாஷ் சர்மா கைகளில் பந்தை கொடுத்தார்.
ஏனென்றால் ரஸ்ஸலுக்கு கூக்ளி என்று எழுதி பவுலிங் செய்தாலே விக்கெட்டை பறிகொடுப்பார். அந்த அளவிற்கு கூக்ளி பந்துகளை எதிர்கொள்வதில் ரஸ்ஸலுக்கு சிக்கல் உள்ளது. இதனை முன்பே கணித்து திட்டமிட்டிருந்தாலும், சுயாஷ் சர்மாவின் மோசமான பவுலிங்கை கொஞ்சம் கூட மனதில் வைக்காமல் பந்தை கொடுத்ததில் தான் ரஜத் பட்டிதார் தனித்து தெரிய தொடங்கி இருக்கிறார்.
அதேபோல் ஆர்சிபி அணியில் இருக்கும் திறமைகளை முதல் போட்டியிலேயே பரிசோதித்துள்ளார். க்ருணால் பாண்டியா, சுயாஷ் சர்மா, லிவிங்ஸ்டன் என்று தங்களிடம் 3 ஸ்பின்னர்கள் எவ்வளவு திறமையானவர்கள், எவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்ய முடியும் என்பதை ஆர்சிபி அணியின் நிர்வாகமும் கண்டறிந்துள்ளது. இதனால் கேப்டனாக முதல் போட்டியிலேயே ரஜத் பட்டிதார் பாஸ் மார்க் வாங்கியுள்ளார் என்று பாராட்டுகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications