ஹீரோவாக ரிட்டையர் ஆகவில்லை என்றால்.. வில்லனாக மாறிவிடுவீர்கள் தோனி.. இதை பார்த்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அணியின் முன்னாள் கேப்டன்.. சிஎஸ்கேவின் அடையாளம் தோனி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். இந்த முறை சிஎஸ்கேவின் ரசிகர்களே சிஎஸ்கேவை கடுமையாக.. மிக மோசமாக விமர்சனம் செய்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ட்விட்டர் போஸ்டுகள், பேஸ்புக் போஸ்டுகளை பார்த்தால் ஒரு விஷயம் பலருக்கும் தெரிந்து இருக்கும். அது தோனி மீதான கிண்டல். தோனியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து பார்த்து இருப்பீர்கள்.

IPL 2025 CSK

அதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த முறை தோனியை கிண்டல் செய்வதே.. விமர்சனம் செய்வதே அவரின் ரசிகர்கள்தான். தோனிக்காக மேட்ச் பார்க்க சென்றவர்கள்தான் தோனியை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். கடந்த சீசன் முழுக்க தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டதால் பலரும் ஏக்கத்தோடு அவரை பார்க்க சென்றனர். அவர் ஒரு சிக்ஸ் அடித்தால் போதும் என்று பார்க்க சென்றனர்.

ஆனால் இன்று அதே ரசிகர்கள்.. தோனியின் அதே சிக்சை பார்த்து கடுப்பாகி உள்ளனர். அவர் ஆடும் விதத்தை பார்த்து கடுப்பாகி உள்ளனர். இந்த முறை சிஎஸ்கேவின் ரசிகர்களே சிஎஸ்கேவை கடுமையாக.. மிக மோசமாக விமர்சனம் செய்கின்றனர். இதற்கு பின் பல காரணங்கள் உள்ளன.

1. பெங்களூருக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில், இக்கட்டான நேரத்தில் எல்லாம் தோனி இறங்கவே இல்லை. அஸ்வினை இறக்கிவிட்டவர் அவர் போன பின்பே களத்திற்கு வந்தார். கீப்பர் ஒருவர் 9வது விக்கெட்டிற்கு இறங்குவது எல்லாம்.. இந்திய கிரிக்கெட்டில் 90 களில் நடக்கும். விக்கெட் கீப்பர் ஒருவர் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பதெல்லாம் அப்போது அபூர்வம். அதை இப்போது சிஎஸ்கேவில் கடைபிடிக்கிறார் தோனி.

2. தோனியிடம் பவர் இருக்கிறது. கடைசி கட்டத்தில் இறங்கி அவர் சிக்ஸும் அடிக்கிறார். ஆனால் இறங்க மாட்டேன் என்கிறார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக கடைசியில் ஷோ காட்டவே இறங்குவேன் என்று மனநிலை ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது.

3. தோனியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது சிக்ஸ் அல்ல. அவர் இறங்கி மேட்சை முடிப்பது. முக்கியமாக சிஎஸ்கே அணி மோசமான சூழலில் உள்ள போது இறங்கி முக்கியமான நேரத்தில் ஆட்டத்தை முடிப்பது.

4. ஆனால் இக்கட்டான நேரத்தில் இறங்கிய தோனி முதல் பாலில் டொக் வைக்கிறார். முன்பெல்லாம் மோசமான நேரத்தில் இறங்கி மேட்சை மெதுவாக கொண்டு சென்று அப்பறம் வேகம் எடுப்பார். ஆனால் இப்போதெல்லாம் மேட்சை முடிக்கும் எண்ணம் தோனியிடம் இல்லை. சிக்ஸ் அடித்து ஷோ காட்டினால் போதும் என்று ஆடுகிறார்.

5. கடைசி ஓவரில் சில பந்துகள் வரை சிக்ஸ், பவுண்டரி அடிக்க கூட பயப்படுகிறார். முன்பெல்லாம் பழைய ஐபிஎல் காலத்தில்.. மேட்ச் முடிந்த பின் யார் நீண்ட தூரம் சிக்ஸ் அடிக்கிறார்கள் என்ற போட்டி நடத்தப்படும். பந்தை டாஸ் செய்து சிக்ஸ் யார் தூரமாக அடிக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். அப்படித்தான் இப்போது மேட்சை பற்றி யோசிக்காமல் தோனி ஆடிக்கொண்டு இருக்கிறார்.

6. நாம் மோசமாக ஆடினாலும் பரவாயில்லை. சிஎஸ்கே தோற்றாலும் பரவாயில்லை. கடைசியில் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கலாம் என்பது போல ஆடினார். எல்லாம் முடிந்த பின் கடைசியில் மேட்ச் கைவிட்டு போன பின்.. இப்போ பாரு ஆட்டத்தை என்று சொல்லும் அளவிற்கு தேவையின்றி சிக்ஸ் பவுண்டரி என்று பப்ளிசிட்டி ஸ்டண்ட் போல அடிக்கிறார்.

7. நீங்கள் ஹீரோவாக ரிட்டையர் ஆகவில்லை என்றால்.. வில்லனாக மாறிவிடுவீர்கள் என்று கிரிக்கெட்டில் சொல்வார்கள்.. அப்படிதான் தோனி மாற தொடங்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+