IPL-ல் வங்கதேச வீரர் இருக்கக்கூடாது! கொல்கத்தா அணிக்கு.. இந்திய கிரிக்கெட் வாரியம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஷூர் ரகுமானை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அணியிலிருந்து ரகுமானை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிகெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஷூர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அண்மைய நிலவரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யவும் கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

IPL KKR BCCI

பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா இந்த தகவலை இந்தியா டுடே-க்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார். முஸ்தஃபிஷூரை முறையாக விடுவிக்க கேகேஆர்-க்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாகவும் சைகியா தெரிவித்திருக்கிறார். "சமீபத்திய சலசலப்புகள் காரணமாக, முஸ்தஃபிஷூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கேகேஆர் உரிமையாளரை பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மாற்று வீரர் கோரப்பட்டால், பிசிசிஐ அதனை அனுமதிக்கும்" என்று சைகியா கூறியுள்ளார்.

முஸ்தஃபிஷூர் ரஹ்மான், கடந்த டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார். இந்த ஏலத்தில் ஒப்பந்தமான ஒரே வங்கதேச வீரர் இவர் மட்டும்தான். ஆரம்பத்தில் கிரிக்கெட் திறனுக்காகவே இவரது தேர்வு கவனம் ஈர்த்தது. எனினும், விரைவில் இது சர்ச்சையாக மாறியது.

வங்கதேசத்தில் சமீபத்தில் இந்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியாவிலிருந்து வலதுசாரி குழுக்களும், பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

முன்னதாக ரகுமானை ஏலத்தில் எடுத்ததற்காக நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாருமான ஷாருக்கானை துரோகி என்று பாஜகவினர் விமர்சித்திருந்தனர். உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் சங்கீத் சோம், "ஒருபுறம் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்; மறுபுறம் ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கப்படுகிறார்கள். தேசத்துரோகி திரைப்பட நடிகர் ஷாருக் கான், வங்கதேச கிரிக்கெட் வீரரான ரஹ்மானை ₹9 கோடிக்கு வாங்கியுள்ளார். இத்தகைய துரோகிகளுக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. இந்த நாட்டின் மக்கள்தான் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள். பணம் இந்த நாட்டிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டீர்கள்" என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, ஆன்மீக குரு தேவகினந்தன் தாக்கூரும், "வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு, உயிரோடு எரிக்கப்படுவதையும், பெண்கள் தாக்கப்பட்டதையும் அவர் பொருட்படுத்தாமல், தனது அணியில் வங்கதேச வீரர்களைச் சேர்த்திருப்பதை, KKR உரிமையாளரை பிரபலமாக்கிய சனாதன பக்தர்கள் மற்றும் இந்துக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று ஷாருக்கானை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+