கல்வியை விட கிரிக்கெட்டே முக்கியம்.. தேர்வை புறக்கணித்த வைபவ் சூர்யவன்ஷி.. தந்தை சொன்ன வார்த்தை!
மும்பை: இந்திய யு19 வீரர் வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை புறக்கணித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் முடிவுக்கு அவரது தந்தை சஞ்சீவ் ஆதரவு தெரிவித்திருக்கிறார். படிப்பில் கவனம் செலுத்தி இருந்தால், அவரால் கிரிக்கெட்டே விளையாடி இருக்க முடியாது என்றும் சஞ்சீவ் ஆதரவாக பேசி இருக்கிறார்.
அண்மையில் நடந்த யு19 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸ் காரணமாக வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதனிடையே வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டது.

என்னவென்றால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தான். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் கில்லாடியாக இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, படிப்பில் தடுமாறுவது இயல்பு தான். ஆனால் ஊடகங்களும், ரசிகர்களும் வைபவ் சூர்யவன்ஷியின் மதிப்பெண்களை கவனத்தில் கொண்டால், அது சிறுவனாக உள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு மனதளவில் பாதிப்பை உருவாக்கலாம்.
அதற்கேற்ப வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு தேர்வை எழுதுவாரா என்று தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது. ஆனால் வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு தேர்வை எழுதாமல் மொத்தமாக புறக்கணித்திருக்கிறார். இதன் காரணமாக பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அட்வைஸ் கொடுக்க தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் முக்கியம் என்றாலும், அடிப்படை கல்வியும் அவசியம் என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆதரவாக தந்தை சஞ்சீவ் குரல் கொடுத்துள்ளார். அதில் சஞ்சீவ் பேசுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்து நாக்பூரில் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரின் பொதுத்தேர்வு தொடர்பாக ஒரு பில்டப் கொடுக்கப்பட்டு கொண்டே இருந்தது. அதனால் இம்முறை தேர்வை எழுத வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
ஒருவேளை வைபவ் சூர்யவன்ஷி தேர்வுக்கு வந்திருந்தால், அவரால் போதுமான அளவிற்கு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே வைபவ் சூர்யவன்ஷியின் முடிவு சரியானது என்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 3வது வாரத்தில் தொடங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், சிஎஸ்கே, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு அணிகளும் பயிற்சியை தொடங்கிவிட்டனர். கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 252 ரன்களை குவித்தார். இம்முறை ராஜஸ்தான் அணி அவருக்கு முழு சீசனிலும் விளையாட வாய்ப்பு அளிக்கும் என்று கருதப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications