இங்கிலாந்து வீரரை எடுக்க.. ப்ரீத்தி ஜிந்தாவுடன் கடுமையாக போட்டியிட்ட சிஎஸ்கே.. இப்படி ஆகிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி ப்ரூக்கிற்கு சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து சென்றது. இவரை எடுக்க பஞ்சாப் தீவிரமாக முயன்றது.

தொடக்கத்திலேயே ஷமி, அர்ஷ்தீப் சிங், கே எல் ராகுல் உள்ளிட்ட சிலரை எடுக்க முயன்று சிஎஸ்கே பின்வாங்கியது. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி ப்ரூக்கிற்கு சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து தீவிரமாக முயன்றது. எப்போதும் எந்த வீரரை எடுத்தாலும் சிஎஸ்கே அணிக்கு போட்டியாக பஞ்சாப் வரும். அதேபோல் இன்றும் பஞ்சாப் போட்டியிட்டது. 5 கோடி ரூபாய் வரை சென்ற நிலையில் சென்னை அணி போட்டியில் இருந்து பின்வாங்கியது. இதையடுத்து பஞ்சாப் அணிக்கு வீரர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சிஎஸ்கே அவரை கேட்டது. பஞ்சாப் விடாமல் துரத்தி வர டெல்லி அணியும் போட்டியில் இணைந்தது.

கடைசியில் டெல்லி அணி 6.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணிக்கு அவர் கிடைக்காமல் போனார்.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

ஏலம் போன முக்கிய வீரர்கள்: ரிஷப் பண்டை அணியில் எடுக்கவும் கடுமையான போட்டி நிலவியது. முக்கியமாக ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டி போட்டன.

ஆனால் லக்னோ அணி விடாமல் இவரை எடுக்க தீவிரமாக ஆர்வம் காட்டியது . 20.5 கோடி ரூபாய் வரை இதற்காக லக்னோ அணி போட்டியிட்டது. அதன்பின் லக்னோ அணியுடன் போட்டியிட மற்ற அணிகள் வரவில்லை.

இதையடுத்து டெல்லி அணி அவரை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து லக்னோ அணி அவரின் விலையை 27 கோடி ரூபாயாக உயர்த்தியது. ஆனால் டெல்லி அணி அவரை அதன்பின் ஆர்டிஎம் எடுக்க விரும்பவில்லை. இதையடுத்து லக்னோ அணி அவரை எடுத்தது.

2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான ககிசோ ரபாடாவை குஜராத் அணி எளிதாக எடுத்துள்ளது. இவரை வாங்க மும்பை அணி கடுமையாக போராடியது.

மும்பை அணி எப்போதும் பவுலர்களை அதிக விலைக்கு எடுக்கும். அந்த வகையில் இவரை எடுக்கவும் தீவிரமாக முயன்றது. அதன்படியே 9.5 கோடி ரூபாய் வரை இவரை எடுக்க மும்பை அணி முயன்றது. ஆனால் குஜராத் அணி விடாமல் துரத்தியது. 10.5 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி இவரை எடுக்க முயன்றது. அப்போது பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த விரும்புகிறதா என்று கேட்கப்பட்டது. பஞ்சாப் அணி இதை விரும்பவில்லை என்றதும்.. குஜராத் அணி 10.5 கோடி ரூபாய்க்கு அவரை தூக்கியது.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றவர்.. மிட்சல் ஸ்டார்க். கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு அந்த சீசனில் கொல்கத்தா வெல்லவும் ஒரு காரணமாக இருந்தார். 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான மிட்சல் ஸ்டார்க்கிற்கு இந்த முறையும் கடுமையான போட்டி நிலவியது.

டெல்லி அணி தொடக்கத்தில் இருந்தே அவருக்கு ஆர்வம் காட்டியது. கொல்கத்தா அணியும் அவரை மீண்டும் எடுக்க தீவிரமாக முயன்றது. 9 கோடி ரூபாய் வரை இரண்டு அணிகளும் மாறி மாறி போட்டியிட்டுக்கொண்டன. இதில் 9 கோடிக்கு பின் வேகம் குறைய பெங்களூர் அணியும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆனது. பெங்களூர் அணிக்கு நல்ல வீரர் வேண்டும் என்பதால்.. பெங்களூர் அணியும் தீவிரமாக முயன்றது. கடைசியாக 11.75 கோடி ரூபாய்க்கு மிட்சல் ஸ்டார்க் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி

மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+