Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி வைத்த தரமான ட்விஸ்ட்.. யார் பிளானோ தெரியல.. திடீரென கொடுத்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நேற்று பெங்களூர் அணி பெரிதாக ஏலம் கேட்கவே இல்லை. ஆனால் இன்று முக்கியமான சில வீரர்களை அந்த அணி ஏலம் எடுத்துள்ளது.

ஆனால் ஆர்சிபி அணி கடைசி வரை முக்கியமான வீரர்களை எடுக்கவில்லை. அந்த அணி கே எல் ராகுலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை கேட்கவில்லை. 14 கோடி ரூபாய்க்கு கிடைத்தும் கூட பெங்களூர் அணி அவரை எடுக்க போகவில்லை. அதேபோல் சாஹலை அந்த அணி எடுக்கவில்லை. இரண்டு முறை மட்டுமே அந்த அணி சாஹலை ஏலம் கேட்டது. அதன்பின் ஏலம் கேட்கவே இல்லை. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

இதோடு இல்லாமல் கடந்த சீசன்களில் அந்த அணிக்கு சிறப்பாக ஆடிய அதிக விக்கெட் டேக்கர் முகமது சிராஜை பெங்களூர் அணி மிஸ் செய்துள்ளது. இது போக பண்டை பெங்களூர் அணி எடுத்து இருக்கலாம். ஆனால் அவருக்காக போராடவில்லை. இது போக ஷ்ரேயஸ் ஐயரை எடுக்கவும் போராடவில்லை. அந்த அணியின் செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. பவுலர்களிலும் பெங்களூர் பெரிதாக யாரையும் எடுக்கவில்லை. இதனால் பெங்களூர் அணி கோர் டீமை உருவாக்குவதிலேயே திணறி வந்தது.

நாள் 1க்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் பணப்பையிலும் மீதமுள்ள மொத்தத் தொகை:

மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி

சர்ப்ரைஸ்: இந்த நிலையில்தான் இன்று சர்ப்ரைஸ் ஏலம் ஒன்றை பெங்களூர் அணி எடுத்துள்ளது. அதன்படி புவனேஷ்வர் குமாரை அணியில் எடுத்துள்ளனர். இவரை எடுக்க மற்ற அணிகள் தீவிரமாக போட்டியிட்டன .

அப்போதெல்லாம் பெங்களூர் அணி ஏலம் கேட்கவே இல்லை. 10.50 கோடி ரூபாய் இருந்த போதுதான் அவரை எடுக்க ஏலம் கேட்டன. அப்போது பெங்களூர் அணி அவரை 10.75 கோடி ரூபாய்க்கு கேட்டது.

சர்ப்ரைஸாக திடீரென உள்ளே வந்து பெங்களூர் அணி ஏலம் கேட்டது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதோடு இல்லாமல் அந்த ஏல தொகைக்கு பெங்களூர் அணி அவரை எடுத்தது.

இதன் மூலம் பெங்களூர் அணியின் பவுலிங் கொஞ்சம் பலமாகி உள்ளது. ஏற்கனவே குருனால் பாண்டியா அணியில் எடுக்கப்பட்டு உள்ளார்.

- ஹேசல்வுட்
- புவி
- யாஷ் தயாள்
- ரசிக் சலாம்
- க்ருணால் பாண்டியா
- சுயாஷ் சர்மா என்று பெங்களூர் அணியில் முக்கியமான பவுலர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர். இதனால் அந்த அணியின் பவுலிங் யூனிட் இந்த முறை வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+