மும்பை குடும்பத்தில் விரிசல்! நடுப்பையன் பாண்டியா வந்ததும்! பெரியவன் ரோஹித், சின்னவன் பும்ரா அப்செட்
சென்னை: மும்பை குடும்பம் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததால் வீரர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா கேப்டன்சி காலி: ஒரு பக்கம் இந்திய டி 20 கேப்டன்சியை இழக்கும் ரோஹித் சர்மா.. மும்பை அணியின் கேப்டன்சியையும் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதோ என்று தோன்றுகிறது. இதை ரோஹித் சர்மா அப்போதே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வர வேண்டாம்.. அவரை எடுக்க வேண்டாம் என்று ரோஹித் சர்மா கூறியதாக நேற்று செய்திகள் வந்தன.
பும்ரா கோபம்: இன்னொரு பக்கம் பும்ராவும் இந்த முடிவால் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவிற்கு பின் அனுபவம் வாய்ந்த வீரர் பும்ராதான். அவரைத்தான் கேப்டனாக போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் பும்ராவிற்கு சமமான வீரர்கள் கில், சஞ்சு சாமான், கே எல் ராகுல் எல்லாம் கேப்டனாக உள்ளார். ருத்துராஜ் கூட கேப்டன்சி பதவிக்கு போட்டியில் உள்ளார். ஜடேஜாவும் கேப்டன் ஆகும் வாய்ப்பில் உள்ளார். அப்படி இருக்க பும்ராவை கேப்டனாக நியமிப்பார்.. மும்பை அணியின் கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பும்ரா இல்லை என்றால் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்துள்ளார்.
ஹர்திக் கேப்டன்: ஹர்திக் பாண்டியா ஒரு அணியில் கேப்டனாக இருந்துவிட்டு இன்னொரு அணிக்கு கேப்டன்சி இல்லாமல் வர மாட்டார். கண்டிப்பாக ஹர்திக் பாண்டியா மும்பை கேப்டன் ஆகவே வாய்ப்புகள் உள்ளன . இதனால் மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கும்.
இதனால்தான் பும்ரா அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. பும்ரா இதை முன்னிட்டே.. அமைதிதான் சிறந்த பதில் என்று ஆங்கிலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் போட்டி: 2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications