"சைலன்ஸ்' சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து காவ்யா மாறன் செய்த சைகை.. வம்பை விலை கொடுத்து வாங்கிய SRH!
ஐதராபாத்: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சென்னை அணி ரசிகர்களை பார்த்து சைலன்ஸ் என்று சைகை செய்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் பலரும் காவ்யா மாறனை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் 3வது வெற்றி இதுவாகும். இதன் மூலமாக 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. பேட் கம்மின்ஸ் ஆடாமலேயே ஐதராபாத் அணி இந்த அளவிற்கு வெற்றிகளை பெற்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகம் அடைந்துள்ளார். இதனிடையே கொண்டாட்ட மிகுதியில் காவ்யா மாறன், அங்கிருந்த சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து "சைலன்ஸ்" என்று சிக்னல் காட்டி இருக்கிறார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காவ்யா மாறன் சைகை காட்டிய வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே சிஎஸ்கே அணி மீது காவ்யா மாறன் பல்வேறு வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளி வந்த பாடல்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் வரை காவ்யா மாறன் சென்றார். தற்போது சிஎஸ்கே அணியை வீழ்த்திவிட்டு ரசிகர்களையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.
இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் காவ்யா மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 2018 இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணியை சிஎஸ்கே அணி வீழ்த்திய காட்சிகளை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மண்ணில் வைத்து பதிலடி கொடுக்கும் என்றும் பேசி வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications