ரன் அவுட்டை தடுத்துட்டாரு.. நடுவரிடம் சொன்ன ஷமி, பண்ட்.. ரகுவன்ஷிக்கு 3வது அம்பயர் கொடுத்த அதிர்ச்சி
லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் இளம் வீரரான ரகுவன்ஷி ஃபீல்டிங் செய்வதை தடுப்பதாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஃபீல்டிங்கை தடுத்ததாக கூறி விக்கெட் கொடுக்கப்பட்ட 4வது வீரர் என்ற மோசமான சாதனையை ரகுவன்ஷி படைத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். 2வது ஓவரிலேயே டிம் செஃபெர்ட் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்த ஓவரில் கேப்டன் ரஹானே 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ரகுவன்ஷி - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்தது.

இருவருமே நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அப்போது பிரின்ஸ் யாதவ் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் ரகுவன்ஷி மிட் ஆன் திசையில் பந்தை அடித்துவிட்டு ரன் சேர்க்க முயற்சித்தார். பாதி கிரீஸ் வந்த பின், கேமரூன் க்ரீன் ரகுவன்ஷியை திருப்பி அனுப்பினார். இதனால் ரகுவன்ஷி பின்னால் பார்த்து கொண்டே கிரிஸை நோக்கி ஓடினார்.
பின்னால் திரும்பி ஓடும் போது, அவரின் கால்களில் பந்து அடித்தது. இதனால் ரன் அவுட் அடிக்க முயற்சித்த போது பந்தை தடுத்துவிட்டதாக முகமது ஷமி, ரிஷப் பண்ட் நடுவரிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் கள நடுவர் உடனடியாக அந்த கோரிக்கையை 3வது நடுவரிடம் கொண்டு சென்றார். சில நிமிடங்கள் ஆராய்ந்த நடுவர், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ரகுவன்ஷிக்கு அவுட் என்று தீர்ப்பு கொடுத்தார்.
இது ரகுவன்ஷிக்கு மட்டுமல்லாமல் மொத்த கேகேஆர் அணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கேகேஆர் அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் 4வது நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபம் அடைந்த ரகுவன்ஷி, பவுண்டரி லைன் அருகே வந்த போது, பேட்டால் தரையில் அடித்து கொந்தளித்தார்.
இதன் மூலமாக ஃபீல்டிங் டிஸ்டர்பன்ஸ் என்று அவுட் கொடுக்கப்பட்ட 4வது வீரராக ரகுவன்ஷி பெயர் எடுத்துள்ளார். இதற்கு முன்பாக ஃபீல்டிங் டிஸ்டர்பன்ஸ் கோரிக்கை அடிப்படையில் யூசுப் பதான், அமித் மிஸ்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இதே பாணியில் ஆட்டமிழந்துள்ளனர். ஆனால் ரகுவன்ஷி விஷயத்தில் நடுவர் தவறான தீர்ப்பு அளித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications