பும்ரா இணைந்தாலும் சரி.. பங்காளி பல்தான்ஸ் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது.. காரணமே இதுதான்!
மும்பை: மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில், தற்போது அந்த அணியுடன் இணைந்துள்ளார். நாளைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவது சந்தேகமாக இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் மும்பை அணிக்காக களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் மும்பை அணியில் பும்ரா இணைந்தாலும், அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவது எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய அணிகள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. சிஎஸ்கே அணி ஹாட்ரிக் தோல்வியை அடைந்திருக்கும் நிலையில், மும்பை அணி 3 போட்டிகளில் விளையாடி 2 தோல்விகளை சந்தித்துள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் பலமாக இருந்தாலும், மும்பை அணி அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மும்பை அணியுடன் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகு பிடிப்பு பிரச்சனை காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, என்சிஏவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இன்று பும்ரா மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.
ஆனாலும் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவது எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா சில மோசமான கேப்டன்சி முடிவுகளும், பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்குமே காரணமாக அமைந்துள்ளது. அதாவது மிட்சல் சான்ட்னர், போல்ட், சஹர், விக்னேஷ் புத்தூர், அஸ்வனி குமார் என்று மும்பை அணியின் பவுலிங் சிறப்பாகவே இருக்கிறது.
இதில் பும்ரா சேர்ந்தால், கூடுதலாக 10 ரன்களை கட்டுப்படுத்தி சில விக்கெட்டுகளை வீழ்த்துவார். ஆனால் மும்பை அணியின் பேட்டிங்கில் எந்த வீரரும் ஃபார்மில் இல்லாமல் உள்ளனர். ரோஹித் சர்மா, ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள்.
திலக் வர்மா கடந்த போட்டியில் ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேற்றப்பட்டார். அதேபோல் ஃபினிஷர் ரோலில் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா முழுமையான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனால் பும்ராவின் இணைப்பு மும்பை அணிக்கு உதவியாக அமைந்தாலும், பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லாமல் வெற்றி பெற முடியாது என்று பார்க்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications