மும்பை அணி பேருந்துக்குள்.. நேரடியாக சென்ற ஹர்திக் பாண்டியா காதலி.. ஜஸ்மின் வாலியாவால் அதிர்ச்சி!
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜஸ்மின் வாலியாவின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேகேஆர் அணியுடனான போட்டி முடிவடைந்த பின் அவர் நேரடியாக மும்பை அணி வீரர்களின் பேருந்துக்குள் ஏறி அமர்ந்தார். இதனால் ஹர்திக் பாண்டியா - ஜஸ்மின் வாலியா காதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதேபோல் நடாஷா ஸ்டான்கோவிக் உடனான பிரிவுக்கு பின் ஹர்திக் பாண்டியா உடனடியாக அடுத்த காதலில் விழுந்தார்.

ஜஸ்மின் வாலியாவுடன் காதல்
பிரிட்டிஷ் நடிகையும், பாடகியுமான ஜஸ்மின் வாலியா உடன் உறவில் இருந்த அவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே ஜஸ்மின் வாலியா உடன் வாழ்ந்து வருகிறார். அதன்பின் க்ரீஸ் நாட்டிற்கு விடுமுறை சென்ற ஹர்திக் பாண்டியா, இருவரும் தனித் தனியாக பதிவிட்ட புகைப்படங்களால் ரசிகர்கள் கணித்தனர். தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுடன் கொழும்பு சென்றார்.
ஐபிஎல் போட்டிகள்
அதேபோல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது துபாயில் இருந்தார். ஆனாலும் இருவருமே தங்களின் உறவு குறித்து அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா - ஜஸ்மின் வாலியா இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஜஸ்மின் வாலியா நேரில் வருவது வழக்கமாகி இருக்கிறது.
வான்கடே சம்பவம்
அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தின் போது கேமரா கண்கள் ஜஸ்மின் வாலியா பக்கம் திரும்புவது வழக்கமாகி இருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் மும்பை அணி வீரர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் வந்தனர்.
பேருந்தில் ஜஸ்மின் வாலியா
அதேபோல் மைதானத்தில் இருந்து புறப்படும் போது குடும்பத்தினருடன் மும்பை அணி பேருந்தில் செல்வார்கள். ஐபிஎல் தொடரில் குடும்பத்தினருடன் இருக்க எந்த கட்டுப்பாடுகள் இல்லை. அந்த வகையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் ஜஸ்மின் வாலியா நேரடியாக மும்பை அணியின் பேருந்துக்குள் ஏறி அமர்ந்தார்.
விரைவில் அறிவிப்பு?
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலமாக ஹர்திக் பாண்டியா - ஜஸ்மின் வாலியா இருவரின் காதல் உறவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு காதலை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications