அந்த நொடி தோனி நியாபகம் வந்துவிட்டது.. டூ ப்ளசிஸ் சொன்ன மாஸ் சம்பவம்.. கொண்டாடும் சிஎஸ்கே!

Subscribe to Oneindia Tamil

ஜொகன்னஸ்பர்க்: எஸ்ஏ20 லீக் தொடரில் டர்டன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரன போட்டியில் ஜேஎஸ்கே அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் டோனவன் ஃபெரேரா அடித்த ரன் அவுட்டை நினைக்கையில், தோனியின் உலகப்புகழ் பெற்ற ரன் அவுட் நினைவுக்கு வந்ததாக டூ ப்ளசிஸ் கூறியுள்ளார்.

எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் டர்பன் அணி 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. ஜேஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான முல்டர் வீசிய அந்த ஓவரில் முதல் 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.

MS Dhoni

அப்போது முல்டர் யார்க்கர் பந்தை வீசாமல், கொஞ்சம் கிராஸாக பந்தை வீசினார். அது நேராக விக்கெட் கீப்பர் கைகக்கு செல்ல, விக்கெட் கீப்பர் டோனவன் ஃபெரேரா ரன் அவுட் செய்வதற்கு ஏதுவாக கீப்பிங் கிளவுஸை கழற்றி தயாராகி இருந்தார். பந்தை பிடித்த அடுத்த நொடியில் ஸ்டம்புகளை பறக்கவிட்டார். இதனால் ஆட்டம் டை ஆகியது. பின்னர் சூப்பர் ஓவர் நடந்து, அதில் ஜேஎஸ்கே அணி த்ரில் வெற்றியை பெற்றது.

இந்த ஆட்டத்திற்கு பின் ஜேஎஸ்கே அணியின் கேப்டன் டூ ப்ளசிஸ் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை தோனி இதேபோன்ற ஒரு ரன் அவுட்டை செய்திருந்தார். வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் அப்படியான சம்பவம் நடந்தது. அப்போது பவுலர் கிராஸாக வீசியதும் நினைவுக்கு வந்தது. அந்த சம்பவம் என் நினைவுக்கு வந்தது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ரன் அவுட்டிற்கான திட்டமே எங்களிடம் இல்லை. நாங்கள் கிராஸாக வீசலாம் என்று மட்டுமே திட்டமிட்டோம். மற்றவை எல்லாம் அதுவாகவே நடந்துவிட்டது என்று தெரிவித்தார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த ரன் அவுட்டை தோனி ரசிகர்களால் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியாது.

ஏனென்றால் வங்கதேச அணிக்கு எதிரான தோல்வி உறுதி என்ற நிலையில், ஹர்திக் பாண்டியாவை கடைசி ஓவரை வீச அழைத்திருப்பார். கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற போது, 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள் கிடைக்கும். கடைசி பந்தில் ஆட்டம் டிராவாக கூடாது என்பதில் தோனி தெளிவாக இருப்பார். நெஹ்ராவுடன் இணைந்து பாண்டியாவுக்கான திட்டத்தை கொடுத்துவிட்டு கீப்பிங் செய்ய வருவார்.

அந்த பந்தை வீசுவதற்கு முன்பாகவே தோனி ரன் அவுட் செய்வது போல் பயிற்சி எடுப்பதோடு, கிளவுஸையும் கழற்றி வீசி இருப்பார். சரியாக பேட்ஸ்மேன் பந்தை மிஸ் செய்த உடன், தோனி பந்தை பிடித்துக் கொண்டு ஓடியே வந்து ரன் அவுட் செய்திருப்பார். தோனியின் இந்த ரன் அவுட், தென்னாப்பிரிக்கா ஜாம்பவானின் நினைவுகளில் இப்போதும் இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+