ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மீது மும்பை எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறது - பொல்லார்ட்
மும்பை: நடப்பு ஐபிஎல் விளையாட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொதப்பலுக்கு மிக முக்கிய காரணமாக ரோகித் ஷர்மா இருந்தார். ஆனால், இப்போது அவரது ஆட்டமே வேற. இதனை குறிப்பிட்டு ரோகித் ஷர்மாவையும், ஹர்திக் பாண்டியாவையும் பொல்லார்ட் பாராட்டியுள்ளார்.
நடப்பு ஐப்பிஎல் விளையாட்டின் தொடக்கத்தில் மும்பை அணியின் ஆட்டம் சொதப்பலாகவே இருந்தது. இத்தனைக்கும் இந்த அணியில் ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தபோதும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை. ரசிகர்களால் பெரிதும் நம்பப்பட்ட ரோகித் ஷர்மா அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஆட்டத்தில் பலருக்கும் திருப்தியில்லை. எனவே அவர் ட்ரோல் மெட்டிரியலாக மாற்றப்பட்டார்.

இதற்கு சரியான பதிலடியை அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் அடித்த இரட்டை அரை சதம் மும்பை அணியை டாப்-4 இடத்திற்கு உயர்த்தியிருக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லர்ட் தற்போது மனம் திறந்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"ரோகித் நன்றாக விளையாடுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் இருந்தது. சில நேரங்களில் விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கை குறைந்துபோகலாம். ஆனால் கிரிக்கெட்டை முழு மூச்சாக கொண்டிருக்கும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வீரர் இப்படியான ட்ரோல்களை சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. சூழல் தற்போது மாறியிருக்கிறது. எனவே அவருக்கு பலரும் ஆதரவளிக்க வேண்டும்.
ரோகித், ஹர்திக் என இருவர் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது மும்பை அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் தொடர்ந்து நாங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல ஹர்திக் பாண்டியா பற்றி கூறிய பொல்லார்ட் கூறுகையில், "உலக கோப்பை சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல வெற்றிகளை அவர் கிரிக்கெட்டில் கண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் பல சவால்களை அவர் கடந்து வந்திருக்கிறார். இவ்வளவு இன்னல்களையும், துன்பங்களையும் சந்தித்த பின்னரும் தொடர்ந்து முன்னேறி வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாம் எல்லோருமே மனிதர்கள்தான். சிலருக்கு வாழ்க்கையில் கொஞ்சம் பிரேக் தேவைப்படும்" என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications