இதுதான் எனக்கு விடுதலை.. 22 வயதில் தவறான முடிவு எடுத்துவிட்டேன்.. விவாகரத்தை அறிவித்த சிஎஸ்கே வீரர்!
மும்பை: சிஎஸ்கே வீரர் ராகுல் சஹர் தனது மனைவி இஷானி ஜோஹரை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். வாழ்க்கையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்வதற்கு முன்பே இளம் வயதில் திருமணம் செய்துவிட்டதாக கூறிய ராகுல் சஹர், இது எனக்கான விடுதலை என்றும் கூறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி பிரபல அடைந்தவர் ராகுல் சஹர். இதன்பின் பஞ்சாப், ஐதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினாலும், அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு திருப்புமுனை அமையவில்லை. இந்திய டி20 அணிக்காக விளையாடியுள்ள ராகுல் சஹர், கடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார்.

இவர் 22 வயதான போதே தனது காதலியான இஷானி ஜோஹர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோவாவில் 2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ராகுல் சஹர் - இஷானி ஜோஹரின் திருமணம் நடைபெற்றது. வாழ்க்கையின் மிக முக்கியமான காலக்கட்டத்தில் ராகுல் சஹர் திருமணம் செய்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 4 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக ராகுல் சஹர் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ராகுல் சஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கு முன்பாகவே மிகவும் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையில் நுழைந்துவிட்டேன். அதன்பின் எனக்கு எதிர்பார்க்காத பாடங்கள் கிடைத்தது.
கடந்த 15 மாதங்களாக நீதிமன்ற அறைகளில் பொறுமையாக இருந்து மீண்டு வந்து வலிமையாக இருக்க கற்றுக் கொண்டுள்ளேன். என் திருமண வாழ்க்கையின் அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கருகிறது. இந்த முடிவினை கோபத்துடனோ, வருத்தத்துடனோ எடுக்கவில்லை.. தெளிவாகவே முடிவு செய்திருக்கிறேன். சில உறவுகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியதில்லை.
அவர்கள் நமக்கு பாடம் கற்பிக்கலவும், நம்மை மாற்றவும் கூட வரலாம்.. இனி என் வாழ்க்கையை சுயமரியாதையுடனும், அமைதியுடனும், சிறந்த வாய்ப்புகளுடன் கட்ட எழுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன். இனி முடிவல்ல.. எனக்கான விடுதலை என்று தெரிவித்துள்ளார். 26 வயதிலேயே ராகுல் சஹர் விவாகரத்தை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications