மும்பை அணிக்கு ஆப்பு.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பும்ரா.. அஸ்வின் நண்பர் போட்டு உடைத்த சீக்ரெட்!
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. இதன்பின் 2வது நாளன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் ரசிகர்களிடையே அதிகமாக எதிர்பார்க்கப்படும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
கடந்த சீசனில் மும்பை அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. அதேபோல் 2019ஆம் ஆண்டுக்கு பின் மும்பை அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி இம்முறை மீண்டும் பயிற்சியாளராக ஜெயவர்தனேவை கொண்டு வந்துள்ளார். ஒட்டுமொத்த பயிற்சியாளர்கள் குழுவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை தோல்வி
அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையிலான மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் மும்பை அணிக்குள் போல்ட் கொண்டு வரப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியின் பவர் பிளே பவுலர்கள் சரியாக அமையாததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
போல்ட், தீபக் சஹர்
அதனை மெகா ஏலத்திலேயே மும்பை அணி சரி செய்துள்ளது. போல்ட் மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரரான தீபக் சஹரையும் போட்டி போட்டு வாங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் பவர் பிளே ஓவர்களிலும், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களிலும், சான்ட்னர், கரண் சர்மா மற்றும் வில் ஜாக்ஸ் ஆகிய மூவரும் மிடில் ஓவர்களிலும் பவுலிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சிக்கலில் பும்ரா
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் 5 போட்டிகளில் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தகவல் கிடைத்தது. மும்பை அணி தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை. ஆனாலும் பும்ரா இதுவரை மும்பை அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. அதற்கு மாறாக பெங்களூரில் உள்ள என்சிஏவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2 வாரங்கள்
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதன்பின் ஓய்வில் இருந்த ஜஸ்பிரிட் பும்ரா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது முதல் 2 வாரங்களுக்கான ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல்-ல் விலகல்?
ஆனால் பும்ராவோ இதுவரை பவுலிங் செய்யவே தொடங்கவில்லை. வழக்கமாக காயத்தின் போது பும்ரா பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். ஆனால் இம்முறை குடும்பத்தினர் உடனான புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார். இதனால் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமே என்று பார்க்கப்படுகிறது.
கணிப்பு
இந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வினின் நண்பரும், பிரபல அனலிஸ்டுமான பிரசன்னா, ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விளையாடாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. வழக்கமாக பும்ராவின் காயத்தை வெளிப்படையாக கூற மாட்டார்கள். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் உத்தேச அணிப் பட்டியல் வெளியான போதே அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறினேன்.
காயத்திற்கு காரணம் என்ன?
அதேபோல் கடைசி நேரத்தில் பும்ரா விலகுவதாக அறிவித்தனர். தற்போதும் பும்ராவின் காயம் மற்றும் ஃபிட்னஸ் குறித்து அமைதி காத்து வருகின்றனர். 2 வாரங்களுக்கு பின் பும்ரா விளையாட வாய்ப்பில்லை என்று அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பும்ராவின் காயத்திற்கு அவரின் பவுலிங் ஆக்ஷன் தான் காரணம். அப்படியான ஒரு பவுலிங் ஆக்ஷன் இருந்தால், நிச்சயம் காயம் ஏற்படும்.
ரசிகர்கள் சோகம்
அதனால் பும்ராவின் ரிலீஸ் பாய்ண்டில் சிறிய மாற்றம் செய்யப்பட வேண்டும். அதனை இந்திய அணியின் அனலிஸ்ட்கள், பயிற்சியாளர்கள், என்சிஏ நிர்வாகிகள் கண்டறிந்து அதற்கேற்ப பும்ராவை தயார் செய்ய வேண்டும். ஏனென்றால் பும்ரா போன்ற ஒரு பவுலர் இந்திய அணிக்காக அதிக ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மும்பை அணி ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications