பாகுபலி எபக்ட்.. க்ருணால் பாண்டியா பவுலிங் வீடியோ.. ஆர்சிபி வீரர் வரை பிரபலமான லுங்கி பாய்ஸ்!
பெங்களூர்: லுங்கி பாய்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவை ஆர்சிபி அணி வீரர் நட்சத்திர ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா பகிர்ந்திருக்கிறார். பாகுபலி எஃபக்டில் க்ருணால் பாண்டியா பவுன்சர் வீசுவதை போல் லுங்கி பாய்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தனர். அதனை க்ருணால் பாண்டியாவே பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியது முதலே லுங்கி பாய்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகரான லுங்கி பாய்ஸ் ராஜ் ப்ரியன், துரந்தர் ஹம்சா போல் ஆர்சிபி ஜெர்சி அணிந்து அந்த அணி ரசிகர்களுடன் ஐக்கியமாகியதாக வெளியிட்ட வீடியோ தேசிய அளவில் டிரெண்டாகியது.

இதனால் ஒவ்வொரு சிஎஸ்கே போட்டியின் போதும், ராஜ் ப்ரியன் என்ன செய்கிறார் என்று சோசியல் மீடியாவில் விவாதம் நடந்து வந்தது. அண்மையில் சிஎஸ்கே தொடர்ந்து 2 போட்டிகளை வென்ற போது, மும்பை ரசிகர்களை பார்த்து "ஒளியிலே தெரிவது கடப்பாரையா.. குஜிலி மஸ்த்து யாரு செஞ்சது" என்று பாடியது மரண கலாயாக அமைந்தது.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியாவின் பவுன்சர் பந்தை வைத்து லுங்கி பாய்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதன்படி விக்கெட் கீப்பர் வெகு தூரத்தில் நிற்பது போலவும், கொலை வெறியுடன் க்ருணால் பாண்டியா பவுன்சர் வீசுவதை போலவும், அந்த பந்து ரிஷப் பண்ட் நெஞ்சில் அடித்து விழுவதை போலவும் வீடியோவை உருவாக்கி வெளியிட்டனர்.
அதன் பின்னணியில் பாகுபலி 2 படத்தின் கிளைமாக்ஸ் இசையையும் இணைத்திருந்தனர். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் டிரெண்டாகியது. தற்போது இந்த வீடியோவை ஆர்சிபி வீரர் க்ருணால் பாண்டியா பகிர்ந்து ரசித்திருக்கிறார். இதனால் இந்த வீடியோ அதிக ரசிகர்களை சென்றடைந்துள்ளது.
மேலும் ராஜ் ப்ரியன் எப்போது ஆர்சிபி ஜெர்சியை கழற்றிவிட்டு சிஎஸ்கே ஜெர்சியை அணிவார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. நீண்ட ஆண்டுகளாக ரீல்ஸ் வெளியிட்டு வரும் லுங்கி பாய்ஸ் சமீப காலங்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். சேப்பாக்கம் மைதானம் வந்த போதும் கூட லுங்கி பாய்ஸ் குழுவினருடன் பிரபலங்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications