ஆர்சிபி அணிக்கு இருக்கும் சாதகம்.. பஞ்சாப் அணியில் உள்ள அந்த பிரச்சனை.. விராட் கோலி கனவு நிறைவேறுமா?
அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை விடவும் ஆர்சிபி அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. என்னதான் பஞ்சாப் அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும், அந்த அணியின் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக சாஹல் காயம் அடைந்துள்ள நிலையில், அர்ஷ்தீப் சிங் கடந்த 5 போட்டிகளாக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை என்பதால், ஐபிஎல் தொடரில் புதிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற உள்ளது.

ஆர்சிபி வலிமை
ஆர்சிபி அணி ரசிகர்கள் விராட் கோலிக்காக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று பேசி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்திய அணி நிர்வாகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன் பட்டத்தை வென்று பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமபலம் வாய்ந்த அணிகள் என்றாலும், பஞ்சாப் அணியை விடவும் ஆர்சிபி அணி சற்று கூடுதல் வலிமை பெற்றுள்ளது.
ஹேசல்வுட்
அதாவது பேட்டிங்கில் இரு அணிகளும் நீண்ட பேட்டிங் வரிசை வைத்திருக்கிறது. ஆனால் ஆர்சிபி பவுலிங்கை ஒப்பிடும் போது, பஞ்சாப் அணியின் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது. ஆர்சிபி அணியின் பவுலிங்கில் ஹேசல்வுட் முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை 5 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹேசல்வுட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
பஞ்சாப் பவுலிங்
அவரை சுற்றி புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட் உள்ளிட்டோர் பவுலிங் செய்ய உள்ளனர். அனைவரும் எளிதாக கட்டுப்பாட்டுடன் பவுலிங் செய்யக் கூடியவர்கள் என்பதால், சரியான திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஆனால் பஞ்சாப் அணியை பொறுத்தவரை சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங்கை சுற்றியே பவுலிங் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அர்ஷ்தீப் சிங் பிரச்சனை
இதில் சாஹல் காயம் காரணமாக முழுமையாக ஃபிட்னஸை எட்டவில்லை. அதேபோல் அர்ஷ்தீப் சிங் கடந்த 5 போட்டிகளுக்கும் மேலாக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறார். அவரது பவுலிங்கை எதிரணி பேட்ஸ்மேன்கள் எளிதாக கடந்துவிடுகின்றனர். ஓமர்சாய், ஜேமிசன் ஆகியோரின் பவுலிங் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.
இடதுகை பேட்ஸ்மேன்
ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையில் ஒரேயொரு இடதுகை பேட்ஸ்மேன் மட்டுமே இருக்கிறார். அதனை வைத்து பஞ்சாப் அணி திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்வது குறித்து யோசிக்க முடியும். இல்லையென்றால், 17 ஆண்டு கால ஈ சாலா கப் நம்தே, இம்முறை ஈ சாலா கப் நம்து-வாக மாறும் நிலை உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications