கிரிக்கெட் கடவுள் கொடுத்த ஊக்கம்.. மும்பை அணியை பதம் பார்த்த சஞ்சு சாம்சன்.. பாவம் பல்தான்ஸ்!
மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடுவதற்கு முன்பாக, நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஜாம்பவான் கிரிக்கெட்டரான சச்சின் டெண்டுல்கரை சந்தித்து சில ஆலோசனைகளை பெற்றுள்ளார். சச்சினுடனான சந்திப்புக்கு பின் சஞ்சு சாம்சன் அதிரடியாக சதம் விளாசி அசத்தி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை சஞ்சு சாம்சன் கைப்பற்றினார். அதன்பின் சஞ்சு சாம்சன் பேசுகையில், 3 மாதங்களாக சச்சின் டெண்டுல்கருடன் நெருங்கிய உரையாடல் நடத்தி வருகிறேன். அவருடனான உரையாடலுக்கு பின் என்னுடைய ஆட்டத்தைப் பற்றிய முழு புரிதலும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சச்சினுடன் நினைத்த நேரத்தில் பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது, என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன் என்றும் நெகிழ்ந்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார். ஏனென்றால் எந்த பேட்ஸ்மேனும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போது, ஒற்றை ஆளாக நின்று சதம் விளாசினார்.
சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்ஸ் உட்பட 101 ரன்களை குவித்தார். சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். சிஎஸ்கே அணிக்காக ஆடிய முதல் சீசனிலேயே சஞ்சு சாம்சன் 2 சதங்களை விளாசி தள்ளி இருக்கிறார். அதேபோல் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் சிஎஸ்கே வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்தப் போட்டிக்கு முன்பாக மும்பை வந்த போதும், சஞ்சு சாம்சன் நேரடியாக சென்று சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பால் உற்சாகம் அடைந்துள்ள சஞ்சு சாம்சன், மும்பை அணியை ஒரு கை பார்த்துள்ளார். அதேபோல் சச்சினின் அறிவுறுத்தலுக்கு பின்னரே சஞ்சு சாம்சன் பவுண்டரிகளை அதிகமாக விளாச தொடங்கினார்.
கிட்டத்தட்ட சஞ்சு சாம்சனுக்கு ஒரு குருநாதராகவே சச்சின் டெண்டுல்கர் மாறிவிட்டதாக பார்க்கப்படுகிறது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 2 சதங்கள் உட்பட 293 ரன்களை குவித்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் இந்த பேட்டிங் ஃபார்மை தொடர்ந்தாலே, சிஎஸ்கே அணியால் எளிதாக வெற்றிகளை பெற முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications