கோப்பை வெல்ல முடியலைனாலும் சரி.. அதுமட்டும் வேண்டாம்.. ஜடேஜாவுக்காக நிற்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலமாக பெறுவதற்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் ரீடென்ஷன் பட்டியலை வெளியிடுவதற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சிஎஸ்கே ரீடென்ஷன் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 2ஆம் வாரத்தில் நடக்கும் என்று தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் விவரங்களை நவம்பர் 15ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் டிரேட் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sanju Samson Trade

ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இம்முறை தன்னை ரிலீஸ் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். இதனை மறைமுகமாகவே சஞ்சு சாம்சன் பல்வேறு இடங்களிலும் கூறி இருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்குள் கொண்டு வர 4 அணிகள் முயற்சித்து வருகின்றன.

டெல்லி, கேகேஆர், சிஎஸ்கே மற்றும் லக்னோ ஆகிய 4 அணிகளும் சஞ்சு சாம்சனை டிரேட் மூலமாக கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்திருக்கிறார். தோனியின் இடத்தில் சஞ்சு சாம்சனை விளையாட வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகமும் விரும்பி இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டது.

ஆனால் ராஜஸ்தான் அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜாவை டிமாண்ட் வைத்தனர். இதனால் சிஎஸ்கே பின் வாங்கியது. இதையடுத்து கேகேஆர், டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும், எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தற்போது பந்து மீண்டும் சிஎஸ்கே அணி நிர்வாகம் பக்கம் திரும்பி இருக்கிறது.

இம்முறை தோனியும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதேபோல் ஜடேஜாவிடமும் சிஎஸ்கே அணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அவருக்கு ராஜஸ்தான் அணிக்கு செல்ல விருப்பம் இருந்தால் மட்டுமே, இதுதொடர்பாக அடுத்தக் கட்டத்திற்கு செல்லுமாறு தோனி தெரிவித்திருந்தார்.

ஆனால் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா மட்டுமல்லாமல் பிரெவிஸ்ஸையும் கேட்டுள்ளது. அதற்கு ஜடேஜா மற்றும் சாம் கரண் என்று டீல் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியில் கசிந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். என்ன ஆனாலும் ஜடேஜாவை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிஎஸ்கே அணி ரசிகர்கள் நிற்கின்றனர்.

2023 ஐபிஎல் தொடரின் போது தோனிக்கு முன் ஜடேஜா பேட்டிங் செய்ய வந்த போதெல்லாம், ரசிகர்கள் விரைவாக ஆட்டமிழக்க வேண்டும் என்று வேண்டினர். ஆனால் ஜடேஜாவை சிஎஸ்கே அணி டிரேட் செய்யப் போகிறது என்ற தகவல் கசிந்த உடன், பலரும் ஜடேஜா கடைசி வரை சிஎஸ்கே அணியுடன் பயணிக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+