சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கொடுங்க.. இந்த பையன் உறுதியா சம்பவம் பண்ணுவான்.. கெஞ்சி கேட்ட அஸ்வின்!
மும்பை: சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரரான சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் சர்ஃபராஸ் கான் அசத்தலாக ஆடிய நிலையில், விஜய் ஹசாரே தொடரில் 75 பந்துகளில் 14 சிக்ஸ் உட்பட 157 ரன்களை சர்ஃபராஸ் கான் விளாசி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்ட பின், அவர் பெரிதாக பேட்டிங் ஃபார்மில் இல்லை. ரஞ்சி டிராபி தொடரில் சர்ஃபராஸ் கான் பெரிதாக ரன்களை சேர்க்காத சூழலில், ஐபிஎல் தொடரில் அவரை சிஎஸ்கே அணி வாங்கியது. அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு வாங்கிய போதும், சர்ஃபராஸ் கான் சிஎஸ்கே அணி வாங்கியதால் பெருமிதம் கொண்டிருந்தார்.

சிஎஸ்கே அணிக்காக உண்மையாக இருப்பேன் என்று கூறிய சர்ஃபராஸ் கான், இந்த வாய்ப்புக்கு நன்றி என்று கூறியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால் உற்சாகம் அடைந்த சர்ஃபராஸ் கான், சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை விளாசி தள்ளினார். தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் சர்ஃபராஸ் கானின் ஆட்டம் மிரட்டலாக அமைந்துள்ளது.
ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சர்ஃபராஸ் கான் 75 பந்துகளில் 14 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 157 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார். அதிலும் ஸ்வீப் மற்றும் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்கள் மூலமாக ரன்களை சேர்ப்பது மிரள வைத்திருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி சர்ஃபராஸ் கானின் ஃபார்மை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபார்மை அப்படியே விஜய் ஹசாரே தொடரிலும் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து வருகிறார். அதிலும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை ஸ்வீப் மற்றும் ஸ்லாக் ஸ்வீப் மூலமாக மர்டர் செய்து வருகிறார். சர்ஃபராஸ் கான் இந்திய அணியின் கதவை தட்டவில்லை.. அதனை உடைக்க தொடங்கி இருக்கிறார்.
இதே ஃபார்மை அப்படியே சிஎஸ்கே அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சிஎஸ்கே அணியிடம் ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த ஐபிஎல் தொடருக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். சர்ஃபராஸ் கானின் ஃபார்ம் சிஎஸ்கே நிர்வாகிகளையும் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications