Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணத்தை ரத்து செய்த ஸ்மிருதி மந்தனா.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. பலஷ் முச்சல் ரியாக்சன்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் உடனான திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு பலஷ் முச்சல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சூழலை அமைதியாக கடக்கப் போகிறேன் என்றும், ஒருவரை பற்றி தீர்மானிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும் என்று பலஷ் முச்சல் கூறியுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா நீண்ட ஆண்டுகளாக பலஷ் முச்சல் என்பவருடன் காதலில் இருந்தார். இதனை ஸ்மிருதி மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உறுதி செய்திருந்தார். 29 வயதாகும் ஸ்மிருதி மந்தனா, இந்திய மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசி சாதனை படைத்திருந்தார்.

Smriti Mandhana Marriage

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் ஸ்மிருதி அமைந்தார். உலகக்கோப்பை வெற்றிக்கு பின் ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் ஜோடி திருமணம் செய்ய முடிவு எடுத்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் செய்து வந்தனர். அதனையடுத்து இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவுக்கு மோதிரம் அணிவித்தார் பலஷ் முச்சல்.

இதையடுத்து நவம்பர் 23ஆம் தேதி ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்கேற்ப திருமணத்திற்கு முதல்நாள் இரவு வரை ஸ்மிருதி மந்தனா கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இதனிடையே பலஷ் முச்சல் தொடர்பாக சில சேட்கள் லீக்கானது. இதனால் பலஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஸ்மிருதி மந்தனா திருமணத்தை நிறுத்திவிட்டதாக சொல்லப்பட்டது. அதற்கேற்ப திருமண புகைப்படங்களை ஸ்மிருதி இன்ஸ்ராகிராமில் இருந்து நீக்கி இருந்தார்.

அதேபோல் பலஷ் முச்சலை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதையும் நிறுத்தினார். இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் பலருக்கும் பலஷ் முச்சல் மீது சந்தேகம் எழுந்தது. இதன்பின் பலஷ் முச்சல் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.

அதில் பலஷ் முச்சல், இந்த சூழலை அமைதியாக கடக்கப் போகிறேன். வதந்திகள் அடிப்படையில் ஒருவரை பற்றி நாம் தீர்மானிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும். நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கலாம். அடிப்படை ஆதாரமில்லாமல் பரவும் வதந்திகளை மக்கள் நம்புவது பயத்தை கொடுக்கிறது. இனியும் வதந்தி பரப்பினால், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+