அமைதி என்பது.. கல்யாணத்தை நிறுத்திய பின் ஸ்மிருதி மந்தனா கொடுத்த மெசேஜ்.. பலஷ் முச்சலுக்கு பதிலடி
மும்பை: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலஷ் முச்சல் உடனான கல்யாணத்தை ரத்து செய்த நிலையில், அமைதி குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள பதிவு டிரெண்டாகி வருகிறது. இதன் மூலமாக திருமணம் விவகாரத்தில் இருந்து ஸ்மிருதி மந்தனா வெளி வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலஷ் முச்சல் உடனான கல்யாணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தார். உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அடைந்த வெற்றிக்கு பின், ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களின் காதலையும் இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டனர்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் பலஷ் முச்சலும், ஸ்மிருதி மந்தனா இந்தூரின் மருமகளாக வரப் போகிறார் என்று கூறினார். தொடர்ந்து இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற டிஒய் பாட்டில் மைதானத்தில் வைத்து பலஷ் முச்சல் நிச்சயதார்த்த மோதிரத்தை ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் அணிவித்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது.
இதன்பின் நவம்பர் 23ஆம் தேதி ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் இடையிலான திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்கு முன்பான கொண்டாட்டங்களும் களைக்கட்டியது. திருமணத்திற்கு முதல்நாள் நிகழ்வான சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனாவும் சக இந்திய வீராங்கனைகளும் ஆடிய டான்ஸ் வரவேற்பை பெற்றது.
ஆனால் திடீரென ஸ்மிருதி மந்தனா திருமணத்தை நிறுத்தினார். முதற்கட்டமாக ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின் பலஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பலஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த சில சேட்களும் வெளியாகின.
இதனால் பலஷ் முச்சலின் உறவு குறித்து தெரிய வந்ததால், ஸ்மிருதி மந்தனா திருமணத்தை நிறுத்தியதாக சில தகவல் வெளியாகியது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் ஸ்மிருதி மந்தனா தன் சொந்த விவகாரங்களை பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதேபோல் பலஷ் முச்சலும், வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். தற்போது ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்த சோகத்தில் இல்லாமல், அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இப்படியான சூழலில், ஸ்மிருதி மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு பேசுபொருளாகி இருக்கிறது.
அதில் ஸ்மிருதி மந்தனா, என்னை பொறுத்தவரை அமைதி என்பது மௌனம் அல்ல.. அது கட்டுப்பாடு என்று பதிவிட்டுள்ளார். ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய மொபைல் விளம்பரத்தை இந்த வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். அது ஸ்மிருதி மந்தனாவின் வாழ்க்கை சூழலுக்கும் பொருந்தி போயிருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஸ்மிருதி மந்தனா கம்பேக் என்று கமெண்டில் பாராட்டி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications