7 இன்னிங்ஸில் 5 டக் அவுட்.. இதுக்கு சஞ்சு சாம்சனே பரவால.. அபிஷேக் சர்மா வீக்னஸை பிடிச்சிட்டாங்க!
அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் டக் அவுட்டாகி இருக்கும் சூழலில், கடைசியாக ஆடிய 7 இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா 5 முறை டக் அவுட்டாகி இருப்பது விமர்சனத்தை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் மூலமாக ஃபார்மில் இல்லாத வீரர்கள் ஃபார்முக்கு வருவதற்கான வாய்ப்பாக அமையும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சிராஜ் ஜெர்சியை அணிந்து கொண்டு அபிஷேக் சர்மா களமிறங்கினார்.

இதனால் அபிஷேக் சர்மாவுக்கு அதிர்ஷ்டம் உடனிருக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் நெதர்லாந்து அணி ஸ்பின்னரான ஆர்யன் தத் முதல் ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலேயே அபிஷேக் சர்மா போல்டாகி வெளியேறினார். இதன் மூலமாக அபிஷேக் சர்மா ஹாட்ரிக் முறையில் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இன்னும் ஒரு ரன்னை கூட சேர்க்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் கடைசி 7 இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா 5 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கு சஞ்சு சாம்சன் எவ்வளவு சிறப்பாக விளையாடுவதாகவும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். இதன் மூலமாக அபிஷேக் சர்மாவின் வீக்னஸை எதிரணிகள் கண்டறிந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
தொடக்க ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசி பழகிவிட்ட அபிஷேக் சர்மா, திடீரென ஸ்பின்னர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டதும் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். இதனை பாகிஸ்தான் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஸ்பின் வீசி அபிஷேக் சர்மாவை வீழ்த்தினார்.
அதே பாணியை நெதர்லாந்து அணியும் பின்பற்றி அபிஷேக் சர்மாவை வீழ்த்தி இருக்கிறது. இந்திய ஆடுகளங்களில் பவர் பிளேவில் ஸ்பின்னர்கள் பவுலிங் செய்வதே அரிதான விஷயமாகும். அப்படி ஸ்பின்னர்கள் அட்டாகில் வந்தால், சிக்ஸ், பவுண்டரி என்று பறக்கும். ஆனால் அபிஷேக் சர்மா ஸ்பின்னர்களுக்கு தொடர்ந்து திணறுவது இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications