இந்திய அணி இனி வங்கதேசம் செல்லாது.. பிசிசிஐக்கு மத்திய அரசு கொடுத்த அட்வைஸ்.. ரத்தாகும் போட்டிகள்
டெல்லி: வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப வேண்டாம் என்று மத்திய அரசு சார்பில் பிசிசிஐக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்று விளையாட உள்ளது. வங்கதேசத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடர் என்பது அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலககோப்பை போட்டி தொடருக்கு இரு அணிகளுக்கும் நல்ல பயிற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் வங்கதேசத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பி வைக்க வேண்டாம் என்று மத்திய அரசு சார்பில் பிசிசிஐக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டாம். இந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் பிசிசிஐக்கு அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி தொடர்கள் ரத்தாக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இன்னும் பிசிசிஐ இறுதி முடிவை எடுக்கவில்லை. இருப்பினும் மத்திய அரசின் முடிவை பிசிசிஐ பின்பற்ற 100 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் இந்த தொடர் ரத்தாக வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவின் பின்னணியில் இந்தியா- வங்கதேசம் இடையே நிலவி வரும் பதற்றம் தான் காரணம். இந்தியா - வங்கதேசம் இடையே கடந்த ஆண்டு வரை நல்ல உறவு இருந்தது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. பிரதமராக இருந்த
ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இவர் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறார். நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
மேலும் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து கொண்டு நம் நாட்டுக்கு எதிரான புதிய கூட்டமைப்பை ஏற்படுத்த துடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களில் டென்ஷனை உருவாக்கும் நோக்கத்தில் முகமது யூனுஸ் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு நம் நாடு உரிய முறையில் வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் ஏர்போர்ட், துறைமுகங்களில் இருந்து வங்கதேச சரக்குகளை பிற நாடுகளுக்கு அனுப்ப வழங்கப்பட்ட அனுமதியையும், சாலை மார்க்கமாக துணி உள்ளிட்ட ஜவுளி வகைகளை நம் நாட்டுக்கு கொண்டு வரும் அனுமதியையும் ரத்து செய்தது.
இதனால் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் வங்கதேச முகமது யூனுஸ் ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பாதுகாப்பு கருதி வங்கதேச சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பிசிசிஐக்கு மத்திய அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications