சுப்மன் கில் காலம் அல்ல.. இது வைபவ் சூர்யவன்ஷிக்கான நேரம்.. பிசிசிஐ-யை காக்க வந்த 15 வயது சிறுவன்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஸ்டார்களுக்கு எப்போதும் பஞ்சமே இருக்காது. சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா என்று ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் உருவாகி கொண்டே இருப்பார். ஆனால் விராட் கோலியை போல் மீண்டும் பைசா வசூல் சூப்பர் ஸ்டார் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் உருவாகவில்லை.
சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இன்னும் வளர்ந்து வரும் வீரர்களாகவே இருக்கிறார்கள். வெளிநாடுகளில் பும்ராவுக்கு மட்டுமே தற்போதைய இந்திய அணியில் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் பிசிசிஐ நிர்வாகத்திற்கு புதிய சூப்பர் ஸ்டாரை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. பலரும் சுப்மன் கில், திலக் வர்மா உள்ளிட்டோரை பேக் செய்து வந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்சர்கள் உட்பட 97 ரன்களை குவித்தது சர்வதேச அரங்கையே அலறவிட்டுள்ளது. இந்த சீசனிலேயே பும்ரா, கம்மின்ஸ், ஸ்டார்க், சிராஜ் உள்ளிட்ட அனைவரையும் விளாசி தள்ளியுள்ளார்.
இந்த 15 வயது இளம் வீரருக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட அத்தனை அணிகளும் தடுமாறி வருகின்றன. ஐபிஎல் போன்ற போட்டிகள் நிறைந்த தொடரில் கூட வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்த முடியாமல் சர்வதேச வீரர்கள் தவித்து வருகின்றனர். இதனால் வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய டி20 அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இங்கிலாந்து முன்னாள் வீரரான வாகன் கூட உடனடியாக சூர்யவன்ஷியை இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள் என்று பேசி இருக்கிறார். இதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சூப்பர் ஸ்டாராக உருவாகி வருவதாக பார்க்கப்படுகிறது. தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஆதிக்கம் ரசிகர்களிடையே ஒரு வகையான சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ரசிகர்கள் புதியவர்களின் ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாததால், இம்முறை ஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் வீரராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications