இது எங்க கோட்டை.. பிரம்மாண்ட சதம் அடித்த விராட் கோலி, ரோகித் சர்மா.. கம்பீருக்கு புதிய தலைவலி!
மும்பை: விஜய் ஹசாரே டிராபியில் இந்திய ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் சதம் விளாசி இருப்பது அஜித் அகர்கருக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. இதன் மூலமாக 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட இருவருமே முனைப்புடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்துவிட்டனர். இதனால் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் முனைப்பை அவர்கள் வெளிக்காட்டவில்லை என்று சொல்லப்பட்டது.

அதேபோல் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் இருவருமே சீனியர் வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். குறிப்பாக ஒருநாள் அணியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று கம்பீர் தீவிரமாக இருக்கிறார். அதற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.
இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை ஒருநாள் அணியில் இருந்து நீக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இருவருமே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் விராட் கோலி 2 சதங்கள், ஒரு அரைசதம் விளாசியது பிரமிப்பை ஏற்படுத்தியது.
இதனால் ஐசிசி தரவரிசையில் இருவரும் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஆகிய இடங்களில் இருக்கின்றனர். ஆனால் அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கு இடையிலான இடைவெளியை காரணம் காட்டி இரு வீரர்களையும் நெருக்கி வருகின்றனர். இதனால் ஃபிட்னஸ் மற்றும் ஃபார்ம் பாதிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது.
ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட முடிவு எடுத்தனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 131 ரன்களும், ரோகித் சர்மா 155 ரன்களும் குவித்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட்டிலும் இருவரும் அசத்துவதால், அஜித் அகர்கருக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளது. இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 2027 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகுவதற்கும் போதுமான நேரம் கிடைக்கும். இதனால் அஜித் அகர்கர் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications