எல்லா டீமையும் ஓடவிட்டு! சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா! பயங்கர வலுவானது எப்படி? சூட்சமமே இதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கு காரணம் இந்திய அணியில் நடந்த பல முக்கிய மாற்றங்கள்தான்.

நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

Champions Trophy 2025

நேற்று 50 ஓவரில் நியூசிலாந்து அணி 251/7 ரன்கள் எடுத்தது. மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல் 63, மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களை எடுத்து ஆட்டத்தை கொஞ்சம் சரிவில் இருந்து மீட்டனர்.

அதன்பின் இறங்கிய இந்திய அணியில் இந்த முறை ரோஹித் கவனமாக ஆடினார். பைனல் முக்கியம் என்பதால் பொறுப்பை உணர்ந்து ஆடினார் . 83 பந்தில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 76 ரன்கள் எடுத்தார். 105 ரன்கள் வரை இந்திய அணி விக்கெட் இழக்காமல் ஆடியது.

ஆனால் அதன்பின் ஷ்ரேயாஸ் 48, அக்சர் பட்டேல் 29 என்று ஆட்டத்தை மாற்றினர். கடைசியில் ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் எப்போதும் போல கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது.

இந்திய அணி மாற்றம்:

சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கு காரணம் இந்திய அணியில் நடந்த பல முக்கிய மாற்றங்கள்தான்.

1. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையின் எல்லா போட்டிகளையும் ஒரே இடத்தில் துபாயில் ஆடியது. மற்ற அணிகள் துபாய் - பாகிஸ்தான் இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்தது.

2. அதிலும் சில அணிகளுக்கு அடுத்த போட்டியை நாம் எங்கே ஆட போகிறோம்.. துபாயில் ஆட போகிறோமா.. பாகிஸ்தானில் ஆட போகிறோமா என்பதே தெரியாத நிலை இருந்தது.

3. இந்தியாவிற்கு பயணம் இல்லாததால் பயிற்சி எடுக்க நேரம் இருந்தது. ஆனால் மற்ற அணிகளுக்கு நேரம், ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை.

4. இந்திய அணி துபாய் பிட்ச் என்பதால் ஸ்பின் பவுலர்களை எடுத்தது. ஆனால் மற்ற அணிகள் பாகிஸ்தானை மனதில் வைத்து பாஸ்ட் பவுலர்களை எடுத்தது. அவர்களால் துபாயில் இந்திய அணியை சமாளிக்க முடியவில்லை.

5. இதெல்லாம் இந்திய அணிக்கு கூடுதலாக சாதகமாக மாறி உள்ளது. மற்ற அணிகளுக்கு எதிராக மாறி உள்ளது.

6. இந்திய அணியில் பும்ரா இல்லை. ஆனாலும் பவுலிங்கில் ஷமி அவரின் இடத்தை நிரப்புகிறார். துபாய் பிட்ச் பெரிதாக பாஸ்ட் பவுலிங்கிற்கு இடம் கொடுக்காது என்பதால் பும்ரா தேவையும் இல்லை.

7. கடந்த டி 20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு வரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக இருந்தது. ஆனால் அது தற்போது சரியாகிவிட்டது.

8. ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் குறைந்தது 40 முதல் 80 ரன்கள் வரை அடிக்கிறார். இது இந்திய அணிக்கு பெரிய பலமாக மாறிவிட்டது.

9. கூடுதலாக அக்சர் பட்டேல் மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் கொடுக்கிறார். அவர் ஆட்டத்தை தேவையான நேரத்தில் சரிவில் இருந்து மீட்கிறார். ஒரு காலத்தில் கைப் என்ற ஒரு வீரர் ஆடியதை போலவே இவரும் ஆடுகிறார்.

10. அதேபோல் பினிஷ் செய்வதற்கு நிறைய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என்று நம்பிக்கையான இணை கடைசி கட்டத்தில் இறங்கி ஆட்டத்தை மாற்றும் சூழல் உள்ளது.

11. இதுதான் ரோஹித் சர்மா பார்மில் இல்லை என்றாலும் இந்தியா வெல்ல காரணம். கோலி, ஷ்ரேயாஸ், அக்சர், ஜடேஜா, பாண்டியா என்ற நீண்ட பேட்டிங் லைன் அப் இருப்பதால் ஓபனிங் சொதப்பினாலும் இந்திய அணிக்கு சிக்கல் இல்லை.

12. இதெல்லாம் போக மிடில் ஆர்டரில் கூடுதலாக கே.எல் ராகுல் இருக்கிறார். அவர் தொடர்ந்து ஆட்டத்தில் நிதானத்தை கடைப்பிடித்து அணியை சரிவின் இருந்து மீட்கிறார். மிடில் ஆர்டரை கிராக் செய்ததே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

13. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இதற்கு முன் 2011 உலகக்கோப்பையில்தான் இவ்வளவு பலமாக இருந்தது.

14. பவுலிங்கில் ஸ்பின் பவுலர்கள் அடிக்கடி ஆட்டத்தை மாற்றுகின்றனர். முக்கியமாக.. வருண் சக்ரவர்த்தி ஆட்டத்தில் விக்கெட் தேவைப்படும் நேரத்தில் சரியாக விக்கெட் எடுத்து கொடுக்கிறார்.

15. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பாக உள்ளது. 40 ஓவருக்கு பின் குல்தீப் யாதவை அடிக்கடி களமிறக்கிறார். இந்த புதிய பிளானிங் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.

இதெல்லாம் போக கோலி பார்மில் இருக்கிறார். ஒரு சதம்.. அதை தாண்டி அடுத்தடுத்து அரை சதங்களை தாண்டிய ஸ்கோர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+