Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க பிரச்சனை? அப்படியே முகம் மாறிய கோலி.. மேட்சில் இதை கவனிச்சீங்களா? ஷாக்கிங்கா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று இந்திய பவுலர்கள் மற்றும் கோலி நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக அதிரடியாக ஆடி வருகிறது. முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

விராட் கோலி நேற்று ஆட்டம் முழுக்க துள்ளல் இன்றி அமைதியாக இருந்தார். விக்கெட் எடுத்த சமயங்களிலும் அவர் பெரிதாக ஜாலியாக இல்லை. அல்லது அதை பெரிய அளவில் கொண்டாடவில்லை. கொஞ்சம் அமைதியாகவே அவரின் கொண்டாட்டம் இருந்தது.

Why are Kohli and Indian fast bowlers showing less attitude against Australia in the WTC Final 2023?

அதோடு போட்டியின் போது கோலியிடம் காணப்படும் ஆக்சன் இல்லாமல் அவர் அமைதியாக இருந்தார். பொதுவாக கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் விக்கெட்டே செல்லவில்லை என்றாலும் தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் கொடுப்பார்.

பாஸ்ட் பவுலர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் போட வைப்பார். அவருக்கு கீழ் பாஸ்ட் பவுலர்கள் செயல்பட்ட விதமே வேறு மாதிரி இருந்தது. பாண்டிங் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் இருந்தது போல கோலி கேப்டன்சியில் இந்திய டெஸ்ட் பவுலர்கள் இருந்தனர்.

ஆனால் நேற்று ரோஹித்திற்கு கீழ் பாஸ்ட் பவுலர்கள் காலையிலேயே உப்மா சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் போல மசமசவென்று இருந்தனர். அவர்கள் பெரிதாக ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு பிரஷர் போடவில்லை. முக்கியமாக சிராஜ் தவிர வேறு யாருமே நேற்று பெரிதாக ஆட்டிடுட் காட்டவில்லை.

பொதுவாக விக்கெட் விழவில்லை என்றாலும்.. தொடர்ந்து எதிரணிக்கு பிரஷர் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த வித்தையை நேற்று இந்திய அணி மைதானத்தில் பெரிய அளவில் மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேட்ச்: தற்போது வரை முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டிற்கு 327 ரன்களை இழந்து ஆடி வருகிறது. முதல் நாளில் 90 ஓவர்களுக்கு பதிலாக 85 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. நேற்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் முதல் இரண்டு செஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன்பின் மோசமாக சொதப்ப தொடங்கியது.

இதில் சிராஜ் போக ஷரத்துல் ஷமி தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் அஸ்வினை எடுக்காதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதிலும் டிராவிஸ் ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

திணறல்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா கடுமையாக திணறி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.

இந்திய அணியில் இன்று ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத் (வி.கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Why are Kohli and Indian fast bowlers showing less attitude against Australia in the WTC Final 2023?

பிட்ச் எப்படி? : லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. பிட்ச் அதிக புற்களோடு பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

இதனால் பவுலிங்கிற்கு.. முக்கியமாக பாஸ்ட் பவுலிங்கிற்கு ஆதரவாக பிட்ச் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு உதவாது என்பதால் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

அந்த வீரர் ஜடேஜா. இந்திய அணியில் இந்த முறை அஸ்வின் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நம்பர் 1 ஸ்பின் பவுலராக இருந்தும் கூட அவர் அணியில் எடுக்கப்படவில்லை. காரணம்.. ஜடேஜாவிடம் பேட்டிங் ஆப்ஷனும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+