குல்தீப் பவுலிங் போட வந்ததும்.. பவுண்டரி லைனுக்கு வந்த அஸ்வின்.. போன மெசேஜ்.. என்ன மனுஷன்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக செமி பைனல் போட்டியில் அஸ்வின் இடை இடையே மெசேஜ் அனுப்பியது பெரிய அளவில் கவனம் பெற்றது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பரபரப்பின் உச்சத்திற்கு சென்று முடிந்தது. அதிலும் நியூசிலாந்து பேட்டிங் இன்னிங்சில் 42 ஓவர்கள் வரை ஆட்டம் விறுவிறுப்பின் உச்சத்தில்தான் இருந்தது.

 Why Ashwin was used as the messenger in India Semi final against New Zealand World Cup?

அதன்பின் ஷமி மட்டும் விக்கெட் எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக நியூசிலாந்து வென்று இருக்கும் . கடைசி 10 ஓவரில் 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் நியூசிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. அதை நோக்கியே நியூசிலாந்து அணி ஆட்டத்தை நகர்த்தி சென்றது.

இதில் ஷமி மட்டும் முதலில் 2 விக்கெட், அதன்பின் 30 ஓவர்கள் கடந்த 2 விக்கெட் எடுக்கவில்லை என்றால் ஆட்டம் கைவிட்டு போய் இருக்கும். அந்த அளவிற்கு அவரின் ஆட்டம் அணிக்கு சிறப்பாக உதவியது.

அஸ்வின்: நேற்று மேட்ச் முழுக்க அஸ்வின் மெசேஜ் கொடுத்துக்கொண்டே இருந்தார். முக்கியமாக கில் பேட்டிங் மெதுவாக செய்த போது அவருக்கு மெசேஜ் சென்றது. அதோடு நிற்காமல் இன்னொரு பக்கம் நேற்று 40 ஓவர்களுக்கு பின் சிராஜ் அதிகம் ரன் கொடுத்தார். ரன்களை வாரி வழங்கினார்.

அதனால் குல்தீப் ஓவர் வீசிய போது அஸ்வின் பவுண்டரி லைனிலேயே இருந்து அவருக்கு கைடு செய்தார். இப்படி வீசு.. அப்படி வீசு என்று ஒவ்வொரு பந்திற்கும் மெசேஜ் அனுப்பினார். இதனால் குல்தீப் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சென்றது. அஸ்வின் அணியில் இல்லை என்றாலும் சீனியராக இருந்து கொண்டு ஈகோ பார்க்காமல் செயல்பட்டது பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

இந்தியா வெற்றி: நேற்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் எடுத்து தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதனால் இந்திய அணி 50 ஓவரில் 397-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து இறங்கி பேட்டிங் செய்தது.

அதன்பின் பவுலிங்கில்தான் இந்திய அணி கடுமையாக திணறியது. தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்.

மீண்டும் பவுலிங் போட வந்த ஷமி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார்;. கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார்.

அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார் பின்னர் கடைசியில் ஷமி வரிசையாக 2 விக்கெட் எடுக்க.. 327-10 ரன்கள் எடுத்து நியூசிலாந்து தோல்வி அடைந்தது. நேற்று ஷமி மட்டும் 7 விக்கெட் எடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+