மோடி மைதானத்தில் பைனலை நடத்தியது ஏன்? வான்கடே என்னாச்சு? இந்தியாவிற்கே எதிரான பிசிசிஐ முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை; உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை அகமதாபாத் மைதானத்தில் நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியிலேயே இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. காரணம் முதல் போட்டியிலேயே மிக மிக குறைவான மக்கள்தான் மேட்சை பார்க்க வந்தனர்.

வெறும் 5 ஆயிரம் பேர் கூட ஆட்டத்தை பார்க்க வரவில்லை. பொதுவாக குஜராத் மக்கள் பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்கள் கிடையாது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லிவாசிகள் போல தீவிரமான கிரிக்கெட் ரசிகர்கள் இல்லை. இதனால் அகமதாபாத் ரசிகர்கள் மிக குறைவான அளவில் ஆட்டத்திற்கு வந்தது விமர்சனங்களை சந்தித்தது.

Why did BCCI choose Ahmedabad as the pitch for Australia against India in 2023 World Cup Finals?

பாகிஸ்தான் ஆட்டம்: அதேபோல் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர்.

அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. அகமதாபாத் ரசிகர்களின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

( இதுதான் சென்னை.. உலக கோப்பை தோல்வியால்.. இந்தியாவே ஷாக்கில் இருந்த போது.. நம்ம ஊரில் நடந்த அதிசயம்)

அகமதாபாத் மைதானம்: இந்த நிலையில்தான் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை அகமதாபாத் மைதானத்தில் நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம், பெரிய மைதானம் என்ற காரணத்திற்காக இந்த ஆட்டம் நடத்தப்பட்டு இருக்கலாம்.

ஆனால் வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு அதிக அனுபவம் உள்ளது. இங்கே பல போட்டிகளை ஆடி உள்ளனர். ரோஹித் தொடங்கி பல வீரர்கள் இங்கே அதிகம் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். ரோஹித், ஷ்ரேயாஸ், சூர்ய குமார், பும்ரா ஆகியோர் கூட இங்கே அதிகம் ஆடிய அனுபவம் கொண்டவர்கள்.

அப்படி இருக்க அகமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தை நடத்தும் முடிவை யார் எடுத்தது. இந்த பிட்ச் பெரிய பிரபலமான பிட்ச் கிடையாது , அதேபோல் இங்கே ஆட்டத்தை நடத்துவது இந்திய அணிக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது. இருந்தாலும் "வேறு சில காரணங்களுக்காக" இங்கே ஆட்டத்தை நடத்தியது ஏன் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளது.\

Why did BCCI choose Ahmedabad as the pitch for Australia against India in 2023 World Cup Finals?

இந்தியா தோல்வி: நேற்று முதலில் இறங்கிய இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது . முக்கியமாக பேட்டிங்கில் ரோஹித், கோலி, ராகுல் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. பவுலிங்கில் ஷமி, பும்ரா தொடக்கத்தில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கடுமையாக ரன்களை வாரி வழங்கினார். இந்த உலகக் கோப்பை முழுக்க அவர் சரியாக ஆடவில்லை. கூடுதலாக ட்யூ வேறு சேர்ந்துகொண்டது . இதனால் பவுலர்கள் பலரும் லைன், லென்த் கூட தவறாக போட்டனர்.

பிரஷர் காரணமாக.. லைன், லென்த் இரண்டிலும் வீரர்கள் சொதப்பி தொடங்கினர். முக்கியமாக சிராஜ், பும்ரா, குல்தீப் கூட லைன் மற்றும் லென்த் இரண்டிலும் தவறு செய்ய தொடங்கினார். அவர்களின் இந்த சொதப்பல் காரணமாக ஹெட் விக்கெட்டை கடைசி வரை எடுக்க முடியவில்லை. இன்று ஹெட் மட்டும் 137 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+