இந்தியா - அமெரிக்கா மேட்சுக்கு இடையே.. திடீரென Oracle பங்கு மதிப்பு உயர்ந்தது ஏன்? என்ன சம்பந்தம்?
சென்னை: நேற்று இந்தியா - அமெரிக்கா இடையிலான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இடையில் ஆரக்கிள் (Oracle) நிறுவன பங்குகள் உயர்ந்தது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆரக்கிள் (Oracle) நிறுவனம் மைக்ரோசாப்ட் (MSFT), OpenAI மற்றும் Alphabet's (GOOGL) Google Cloud ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு (AI) storage தரவு மையங்களுக்கான பெரிய கிளவுட் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது. இதையடுத்து அமெரிக்க வர்த்தகத்தில் Oracle பங்குகள் 13% க்கும் அதிகமாக உயர்ந்தது.

நியூயார்க்கில் நேற்று ஆரக்கிள் பங்குகள் 13% உயர்ந்து $140.38 இல் முடிவடைந்தது, இது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு டிசம்பர் 2021 க்குப் பிறகு மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பு என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. தரவுத்தள மென்பொருளுக்கு பெயர் பெற்ற ஆரக்கிள் நிறுவனம், எதிர்பார்த்ததை விட சிறந்த மார்க்கெட் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. Open AI மற்றும் Google போன்ற தொழில்நுட்ப போட்டியாளர்களுடன் இணைந்து செயல்படுவதாக அவர்கள் அறிவித்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
விவாதம்: நேற்று இந்தியா - அமெரிக்கா இடையிலான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இடையில் ஆரக்கிள் (Oracle) நிறுவன பங்குகள் உயர்ந்தது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அட இது இரண்டிற்கும் என்ன தொடர்பு என்ன என்று நீங்கள் கேட்கலாம்.
நேற்று நடந்த டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்ற பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய அமெரிக்கா 110-8 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. இதில் டெய்லர் 24, நிதிஷ் குமார் 24 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் இறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 3 ரன்களுக்கு அவுட் ஆனார். கோலி டக் அவுட் ஆனார். சூர்யா குமார் யாதவ் 50 அடிக்க, துபே 31 ரன்கள் அடிக்க இந்திய அணி எளிதாக வென்றது.
18.2 ஓவரில் இந்திய அணி 111-3 ரன்கள் எடுத்து வென்றது. அமெரிக்க அணி இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. வரிசையாக 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி நேற்று முதல்முறை ஒரு போட்டியில் வீழ்ந்து உள்ளது.
நேற்று இந்த ஆட்டத்தில் ரோஹித், கோலி விக்கெட்டை அமெரிக்க வீரர் சௌரப் நேத்ரவல்கர் எடுத்தார். இவர் சாப்டவேர் இன்ஜினியர். நாம் தேடுதல் பொறிகளில் தேடும் போது ஒரு வார்த்தையை அடித்தால் அதுவே அடுத்த வார்த்தைகளை உங்களுக்கு suggestion காட்டுவதை கவனித்து இருப்பீர்கள். அதை உருவாக்கி, அதற்கு உரிமை வைத்து இருக்கும் நபர்தான் சௌரப் நேத்ரவல்கர்.
இவர் ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தில் "Principal Member of Technical Staff." பதவியில் இருக்கிறார். இந்த நிலையில்தான் நேற்று சரியாக அவர் கோலி விக்கெட்டை எடுத்த அதே நேரம் ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தது. இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்றாலும் சரியாக இது அதே நேரத்தில் நடந்ததால் இரண்டையும் தொடர்பு படுத்தி நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications