பெரிய ரிஸ்க்குங்க.. இனி சான்ஸே இல்லை.. ரோஹித் சர்மா எடுத்த பகிரங்க முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக்!
சென்னை: இந்திய அணியில் இந்த போட்டியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடி வருகின்றனர்.
தென்னாபிரிக்கா அணியில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

இதையடுத்து முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி வருகிறது. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 24 பந்தில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி என்று 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இன்னொரு பக்கம் கில் 22 ரன்கள் எடுத்தும், கோலி 4 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.
( கோலி சதத்தால் இந்தியாவிற்கு வந்த பிரச்சனை! எதிர்கால கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிக்கல்! ஏன் தெரியுமா)
மாற்றம் தேவை: இந்திய அணியில் இந்த போட்டியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்திய அணி செமி பைனலுக்கு தேர்வாகிவிட்டது. இப்படி இருக்க இந்திய அணி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து டெஸ்ட் செய்யலாம்.
உதாரணமாக மிடில் ஆர்டரில் இஷான் கிஷனை இறக்கி சோதனை செய்யலாம். அதே சமயம் அணிக்குள் அஸ்வினை கொண்டு வரலாம். மிடில் ஆர்டரில் சூர்யா குமார் யாதாவிற்கு ஓய்வு கொடுக்கலாம். ஸ்பின் பவுலிங்கில் குல்திப் யாதாவிற்கு ஓய்வு கொடுக்கலாம். இதன் மூலம் அஸ்வினை கொண்டு வரலாம்.
ஏனென்றால் குல்தீப் எல்லாம் முதல் போட்டியில் இருந்து ஆடி வருகிறார். கிட்டத்தட்ட 7 போட்டிகளாக ஆடிக்கொண்டு இருக்கிறார். இதனால் அவருக்கும் ஓய்வு அவசியம். அப்போதுதான் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு இவர் ஆட சரியான சூழ்நிலை இருக்கும்.
மாற்றம் இல்லை: ஆனால் இன்றைய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அஸ்வின் அணிக்குள் கொண்டு வரப்படவில்லை. மிடில் ஆர்டரில் மாற்றம் இல்லை. குல்தீப் யாதவ் ஓய்வு பெறவில்லை.

இதனால் வீரர்கள் சோம்பல் அடையும் வாய்ப்புகள் உள்ளன. இது போக மிடில் ஆர்டரில் புதிய காம்பினேஷனை சோதனை செய்யாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளன. அதே சமயம் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்திய அணி வலுவாக உள்ளது.
இப்படி இருக்க வெற்றி காம்பினேஷன் மாற்ற வேண்டாம். இதே அணி ஆடட்டும். வெற்றி காம்பினேஷன் இப்படியே இருக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம். இதனால் இனி அஸ்வின் அணிக்குள் வர வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.
பெரும்பாலும் அவர் சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடியதே உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் அவர் ஆடிய கடைசி போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications